நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019
The WPI Inflation in India was 2.93 Percent in February 2019
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதமாக இருந்துள்ளது. இதே காலத்தில் கடந்த 2018ம் வருடத்தில் மொத்த விலை பணவீக்கம்(Wholesale price index -WPI) 2.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக இருந்த பணவீக்கம் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சக்தி ஆகியவற்றில் ஏற்பட்ட விலை உயர்வால் பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிப்ரவரி 2019 மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation -CPI) 2.57 சதவீதமாகவும், இதுவே ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும் இருந்தது.அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பால் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து கடந்த மாதத்தில் இதன் பணவீக்கம் 4.84 சதவீதம் ஆகும். இதுவே ஜனவரி மாதத்தில் 3.54 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்தது.
எரிபொருட்கள் மற்றும் மின்சக்தி(Fuel & Energy) ஆகியவற்றின் பணவீக்கமும் அதிகரித்து கடந்த மாதத்தின் முடிவில் 2.23 சதவீதமாக இருக்கிறது. உணவு பொருட்களின் விலையும் கடந்த இரண்டு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் காலம் வரை உணவு பொருட்களில் விலை சரிவு ஏற்பட்டு பணவாட்டம் காணப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் எரிபொருட்களின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைவாகவே உள்ளது. இதன் பணவீக்கம் கடந்த பிப்ரவரி 2018 காலத்தில் 4.6 சதவீதமாக இருந்த போதிலும், கடந்த மாதத்தில் 2.23 சதவீதமாக தான் இருந்தது.
நாட்டின் பணவீக்கம்(Inflation India) கடந்த சில காலங்களாக குறைந்த அளவிலே இருந்துள்ளதால், அதனை சார்ந்து பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை அறிவித்து வருகிறது. அடுத்து வரும் நிதி கொள்கை குழுவிலும் பாரத ரிசர்வ் வங்கி, வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம்(RBI Interest Rate) என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை