நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்
The Eight Strategies to get Financial Freedom fast
இன்றைய நவீனத்துவ உலகில் பொருளாதார வாழ்க்கை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. பணம் நமக்கு அதிகம் தேவையில்லை என்று சொன்னாலும், தொழில் வளர்ச்சியும், அதனை சார்ந்த தேவைகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதனால் தான், ‘ சிறு துளி பெருவெள்ளம் ‘ என்ற வாசகம் இன்றும் பிரகாசமாகவே உள்ளது.
எளிய முறை வாழ்க்கையோ அல்லது நாம் விரும்பிய வாழ்க்கை முறையோ, எதுவென்றாலும் நாம் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளோம். அப்படி இருக்கும் போது, பொருளாதார தேவைக்காக நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைக்கின்றனர். பணம் தேவை தான், அதற்காக வாழ்நாள் முழுவதும் பணத்தின் பின்னால் செல்வதில் என்ன மகிழ்ச்சி உள்ளது ?
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை சந்தோசமாக செலவழிப்பதற்கான காலம் இருந்தால் மட்டுமே, நாம் சேர்த்த பணத்திற்கான பயன் உண்டு. தொழில்நுட்பம் மேம்பட்டு கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மில் சிலர் இளமை காலத்தில் ஓய்வு பெறுவது பற்றியும் (Early Retirement Plan), பொருளாதார சுதந்திரத்தை அடைய முயற்சிப்பதும்(Financial Freedom) நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான சாத்தியம் குறைவு தான் என்று சொல்ல வந்தாலும், இது போன்ற சிந்தனைகள் ஒரு ஆரோக்கியமான விஷயமே.
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) வேண்டாம் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்று தங்களது தேவைக்கு அதனையே சார்ந்துள்ளனர். இதனை போன்றே நிதி சுதந்திரம் பெறுவதும் ஒரு தேவையே. நிதி சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம்(Financially Free) என்பது நாம் நமக்கான தேவைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்காமல், அதற்கான போதுமான செல்வத்தை முன்கூட்டியே சேர்த்து வைத்து கொள்வது. இதன் மூலம் நாம் நமது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படலாம்.
நிதி சுதந்திரத்தை பெற இன்று பல தகவல்கள் இணையத்தில் கிடைத்தாலும், வெற்றி பெற்றவர்கள் சிலரின் அனுபவங்கள், தோல்விகள் ஆகியவை நம்மை எளிதாக நிதி சுதந்திரம் பெற துணைபுரியும். அப்படியான ஒரு நபரின் சந்திப்பையும், அவரது வார்த்தைகளையும் தான், நான் சில நாட்களுக்கு முன் பெற்றிருந்தேன். கனடா நாட்டை சேர்ந்த ஹார்வ் எக்கர் (Harv Eker) ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர், தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர். ‘ Secrets of the Millionaire Mind ‘ என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரும் ஹார்வ் எக்கர் ஆவார். அவரிடம் நான் கற்ற விஷயங்கள் சில,
நிதி சுதந்திரத்தை விரைவாக பெறுவதற்கான 8 தாரக மந்திரங்கள்:
- சுதந்திரமான மனதை அமைத்து கொள்ளுதல்(Freedom Mindset) :
உங்கள் எண்ணங்கள், நம்பிக்கை, வார்த்தைகள் மற்றும் கொள்கைகளில் நீங்கள் சுதந்திரமாக செயல்பட முனையுங்கள். உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, அதற்கான திட்டம் உங்களிடம் இருக்கும். அதுவே உங்களை முன்னேற்றத்தில் செல்ல துணைபுரியும்.
- இலக்கு மற்றும் திட்டத்தை ஏற்படுத்தி கொள்ளுதல் (Goal and Plan):
நீங்கள் பொருளாதார சுதந்திரம் அடைய முடிவெடுத்தவுடன், உங்களுக்கான சரியான இலக்கையும், திட்டத்தையும் ஏற்படுத்துவது அவசியம். உங்களுக்கு என்ன வேண்டும், எங்கே செல்ல விரும்புகிறீர்கள், என்ன மாதிரியான வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறீர்கள் (What do you want) என்பதை தீர்மானித்து கொள்வது நன்று.
பொருளாதார ரீதியாக தேவைப்படும் பணத்தின் மதிப்பையும் குறித்து வைத்து கொள்வது, அடுத்த 10-15 வருடங்களுக்கு எனக்கும், எனது குடும்பத்திற்கும் என்ன தேவை உள்ளது என்பதையும் கணக்கிட்டு கொள்ள வேண்டும். இலக்கு மற்றும் திட்டமில்லாத சுதந்திரம் என்று எதுவும் கிடையாது. நீங்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டுமானால், இலக்கு மற்றும் திட்டம் என்பதும் அவசியமாகும்.
- சம்பாதிப்பதை விட குறைவாக செலவழியுங்கள் (Spend less than you Earn):
தேவையற்ற செலவுகளை குறைத்தல் அல்லது அதனை தவிர்த்தல் என்பது நிதி சுதந்திரத்தின் முக்கிய பண்பாகும். உங்களிடம் என்ன உள்ளதோ, அதன் எல்லைக்குள் உங்கள் பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.
அவசியமற்ற செலவுகளை தவிர்த்தல் என்பதை உங்கள் வாழ்வில் ஒரு பழக்கமாக்கி கொள்வதும், பின்னாளில் அது உங்களை பல சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைய செய்யும்.
- உங்கள் பணத்தை நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள் (Manage your money):
உங்களுக்கு தேவையான மாத அடிப்படை செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள், உங்களுக்கு பிரியமான இடத்திற்கு செல்ல தேவைப்படும் தொகை ஆகியவற்றை தனித்தனியாக ஒதுக்கீடு (Splitting) செய்ய பழகுங்கள். முடிந்தால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வங்கி கணக்குகளை ஆரம்பியுங்கள்.
ஒவ்வொரு தேவைக்குமான தொகையை முன்னரே எடுத்து வைக்க பழகுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிதி சிக்கல் இல்லாமல் பொருளாதார சுதந்திரத்தை எளிமையாக அடையலாம்.
- அதிகப்படியான பணம் சம்பாதியுங்கள் (Earn a lot more money):
நீங்கள் உங்கள் இளமை காலத்தில் அதிகப்படியான வருமானத்தை பெறும் போது, உங்களுடைய சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிதி சுதந்திரம் பெறுவதை விரைவாகவும், எளிமையாகவும் அடையலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பணம் சம்பாதிப்பதின் ரகசியமே (Secret of Earning Money) , நாம் பெறும் வருமானம் எவ்வாறு நமக்கு கிடைக்கிறது என்பதில் தான் உள்ளது. நம்மை சுற்றியுள்ளவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதின் மூலமே நமக்கான வருமானம் கிடைக்கிறது. மக்களுடைய அதிகப்படியான பிரச்னைகளை கண்டறியுங்கள், அதனை தீர்க்க உதவுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வை அளிப்பவராக (Problem Solver) உங்களை மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான பணம் தானாக வந்து சேரும்.
- மூலதனத்தின் சக்தி வாய்ந்த வாய்ப்புகள் (Investment Appreciation):
உங்களின் பணத்தை வெறும் முதலீடாக மட்டுமல்லாமல், முதலீட்டின் மூலம் பெறும் வருமானத்தின் மதிப்பையும் (Value to Increase) உயர்த்த முயலுங்கள். கையில் கிடைத்த லாபத்தை மறுமுதலீடு (Reinvesting) செய்வதால் உங்களுடைய செல்வத்தின் மதிப்பும் உயரும்.
பங்குகள் (Stocks), பரஸ்பர நிதிகள் (Mutual Funds), மனை விற்பனை (Real Estate), வாடகை வருமானம் (Rental Income) போன்ற மூலதன பெருக்குதலில் உங்கள் ஆர்வத்தை காட்டுங்கள். நீங்கள் ஒரு சொத்தினை வாங்கும் போது மட்டுமே உங்களுக்கான லாபத்தை பெறுகிறீர்கள், விற்கும் போது அல்ல.
- மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை உருவாக்குங்கள் (Create Passive Income):
உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை அதிகமாக வீணாக்காமல், வருமானத்தை அதிகரிப்பதற்கான கற்றலை மேற்கொள்ளுங்கள். கற்றலின் மூலம் மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை பெறுங்கள். நீங்கள் இல்லாமல் செயல்படும் ஒரு தொழிலை அல்லது வணிக அமைப்பை (Business System) ஏற்படுத்துங்கள். அந்த தொழில் உங்களுக்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து தரும்.
உங்களிடம் உள்ள சேமிப்பு சிறு தொகையாக இருந்தாலும், அதனை ஒரு தொழிலாக மாற்றுங்கள் (Converting liquid cash to Business Opportunity). அவை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கான மற்றொரு வாய்ப்பை காட்டும்.
- உங்களுடைய பங்களிப்பு அப்போதும் அவசியம் (Helping others):
நீங்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவது ஒரு புறம் இருந்தாலும், உங்களுடைய பங்களிப்பை மற்றவர்களுக்கும் அளியுங்கள். ஏழை, எளியவர்களின் கல்விக்கு உதவுவது, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது, தொழிலில் ஆர்வமுள்ளவர்களை மேம்படுத்த துணைபுரிவது போன்ற செயல்களை எப்போதும் மேற்கொள்ளுங்கள்.
‘ என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நான் மற்றவர்களுக்கு உதவுவேன் என்று நீங்கள் கூறினால், உங்களால் வாழ்நாள் முழுவதும் யாருக்கும் நன்மையை செய்ய முடியாது. ‘
பணத்தின் ரகசியமே மற்றவர்களுக்கு கொடுப்பதின் மூலம் தான் உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு உதவியும், உங்களை மேம்படுத்தும்.
அறிவே ஆற்றல்(Knowledge is Power). அறிவை நீங்கள் செயல்படுத்தவில்லை என்றால், அதனால் யாருக்கு என்ன பயன் ? செயல்படுத்தப்பட்ட அறிவே பயன்களை விளைவிக்கும். அதனால் தான் இன்று படித்தவர்கள் அதிகம் இருப்பினும், அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. அதற்கு காரணம் கற்ற கல்வியை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான். அதே நேரத்தில் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், சிலர் தங்களின் செயல்களின் மூலம் பிரமாண்டமான வாழ்க்கையை வாழ்கின்றனர். சமுதாயத்திற்கும் பல நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் கற்கும் எந்தவொரு கல்வியையும் செயலில் கொண்டுவர பழகுங்கள். பின்பு, அதனை உங்களின் பழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றி உங்களின் பாதத்தில்…
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை