கச்சா எண்ணெய் வீழ்ச்சியும், ரூபாய் மதிப்பும் – பொருளாதார போக்கு
Declining Crude oil prices and India Rupee against Dollar – Economical Trend
கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக இறங்கு முகத்தில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. WTI எண்ணெய் குறியீடு 50 டாலருக்கு அருகிலும், Brent குறியீடு 60 டாலர் அளவிலும் வர்த்தகமாகி வருகிறது. இதே போல டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 70 – 71 என்ற அளவில் உள்ளது.
Brent குறியீடு கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ஏற்றம் பெற்று அதிகபட்சமாக 87 டாலர் அளவில் வர்த்தகமானது. கிட்டத்தட்ட 96 சதவீதம் உயர்ந்த இந்த குறியீடு, கடந்த ஒரு மாதமாக 30 சதவீதத்திற்கும் கீழ் இறங்கி தற்போது 60 டாலர் என்ற அளவில் உள்ளது. WTI எண்ணெய் குறியீடும் அதிகபட்சமாக 76 டாலர் சென்றாலும், இப்போது 50 டாலருக்கு அருகில் வர்த்தகமாகிறது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 6 வாரங்கள் அடிப்படையில் பார்த்தால், வரலாற்று உச்சமாக 74.72 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 70.80 ரூபாய் மதிப்பில் வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலையும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சந்தையில் இன்னும் இறங்கலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமெரிக்க – சீன வர்த்தக போர், சவுதி அரேபியாவின் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி ஆகியவை கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பை நடப்பில் தீர்மானிப்பதாக உள்ளது. சவுதி அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. அமெரிக்கா நாளொன்றுக்கு 11.7 மில்லியன் பேரல் என்ற அளவிலும், ரஷ்யா 11.5 மில்லியன் பேரலும் உற்பத்தி செய்கிறது.
இதன் நிலை வரும் OPEC (Organization of the Petroleum Exporting Countries) நிகழ்விலும், G20 மாநாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கச்சா எண்ணெய் விலை கடந்த காலத்தில் 2008, 2014-15 மற்றும் நடப்பு வருடத்தில் மிகுந்த இறக்கத்தை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது.
தற்போது நிகழும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு இந்திய பொருளாதாரத்திற்கு துணைபுரிவதாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எண்ணெய் சார்ந்த மானிய சுமையை குறைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும் போக்குவரத்து செலவையும், நுகர்வோர் செலவினங்களுக்கும் சாதகமாக உள்ளது. இதனால் பங்குச்சந்தைக்கும், அன்னிய முதலீடு திரட்டுவதற்கும் ஆக்கபூர்வமாக இருக்கிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை