ICICI வங்கியின் கருவூல மீறலுக்கு ரூ. 58.9 கோடி அபராதம் – ரிசர்வ் வங்கி
ICICI Bank fined of Rs. 58.9 Crore for Treasury Violations – RBI
பாரத ரிசர்வ் வங்கி(RBI) நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அரசு பத்திர விற்பனை தொடர்பாக சில நெறிமுறைகளை வைத்துள்ளது. அதன் படி அரசு பத்திரங்களை வங்கிகள் இரு வகைகளில் கையாளலாம். Held-to-maturity(HTM) என்று சொல்லக்கூடிய முதிர்வு காலத்திற்குரிய பத்திரங்கள் மற்றும் விற்பனைக்கு கிடைக்கக்கூடிய (Available for Sale) என்ற பிரிவிலும் வங்கிகள் அரசு கருவூல பத்திரங்களை வைத்திருக்கலாம்.
அரசு பத்திர விற்பனை (Sale of Government Securities / Bonds) சம்மந்தமான நடைமுறைகளை ICICI வங்கி கடைபிடிக்கவில்லை மற்றும் அதன் நெறிமுறைகளை மீறியுள்ளதாக, ICICI வங்கிக்கு ரூ. 58.9 கோடியை அபராதமாக பாரத ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
கருவூல பத்திர விற்பனை சார்ந்த நெறிமுறை மீறலில் அபராதம் விதிக்கிப்பட்ட முதல் வங்கி ICICI ஆகும். இது போன்ற அளவு அபராதம் விதிக்கப்பட்டதும் இதுவே முதல் முறை. RBI இதற்கு முன் இவ்வளவு பெரிய (58.9 Crore) தொகையை எந்த வங்கிக்கும் (ஒரு முறை) அபராதமாக விதித்தது இல்லை.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த அபராதம் ஒழுங்குமுறை சார்ந்தே விதிக்கப்பட்டதாகவும் மற்றும் வாடிக்கையாளர் பரிவர்த்தனை சம்மந்தமான உடன்படிக்கையில் எந்த நோக்கமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICICI வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதம் எந்த காலத்திற்குரியது என்பதை பாரத ரிசர்வ் வங்கி தனது செய்தி குறிப்பில் வெளியிடவில்லை. இதன் காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (28-03-2018) ICICI வங்கியின் பங்கு விலை 2 % அளவில் சரிந்தது.
பொதுவாக சந்தையில் வட்டி விகிதங்கள் அதிகரித்தால், முதிர்வு காலத்திற்குரிய (Held-to-maturity – HTM) பிரிவில் பத்திரங்களின் மதிப்பு வீழ்ச்சியடையும். இந்த காலத்தில் வங்கிகள் விதிகளை அமைக்க வேண்டிய அவசியமில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை