Smart Ideas Young Entrepreneurs

இளம் தொழில்முனைவோராக கற்று கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

இளம்  தொழில்முனைவோராக கற்று  கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

10 Smart Ideas to learn as Young Entrepreneurs

நேற்று (25.02.2018)  மதுரை  மடீட்சியா அரங்கில், Youngs Indians (YI) – Confederation of Indian Industry(CII)  மற்றும்  Native Lead Foundation சார்பாக ஆரம்பம் (Aarambam – Startup Contest) 4 வது பதிப்பு (4th Edition) நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில் Native Lead Foundation நிறுவனர்  திரு. சிவராஜா  ராமநாதன் (Sivarajah Ramanathan), Thyrocare Technologies நிறுவனத்தின் நிர்வாக  இயக்குனர்  மற்றும்  நிறுவனர்  Dr. வேலுமணி (Dr. Velumani) அவர்கள், மற்றும்  YI – CII சார்பானவர்களும்  கலந்து  கொண்டனர்.

 

புதிய  தொழில்முனைவோருக்கான  தேடலும், அவர்களுக்கான  முதலீட்டு  வாய்ப்புகள்  பற்றி  பேசப்பட்டது. புதிய  சிந்தனைகள்  கொண்ட இளம்  தலைமுறையினர்  எவ்வாறு  அவற்றை  தொழிலாகவும், சமுதாயத்திற்கு  பயன்படும்படியும்  மாற்றுவதற்கான  ஆலோசனைகள்  கூறப்பட்டன.

 

இளம் தொழில்முனைவோராக  கடைபிடிக்க மற்றும்  கற்று  கொள்ள  வேண்டிய  அடிப்படை  சிந்தனைகள்  பற்றி  Thyrocare நிறுவனத்தின்  நிறுவனர்  டாக்டர்  வேலுமணி அவர்கள்  பேசும்  போது ,

( Read this post after the advertisement… )

 

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

  • ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது, அதனை பூஜ்யத்திலிருந்து தொடங்குங்கள் (Start from Zero). தொழிலை பற்றிய அறிவு, தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும்.

 

  • எப்போதும் எளிமையாக (Be Frugality)  இருக்க பழகுங்கள். அது தான் உங்களை ஒரு சிறந்த தொழில்முனைவோராக காட்டும்.

 

  • ரிஸ்க் (Risk – Reward) எடுக்க தயாராகுங்கள்; உங்கள் திடமான ரிஸ்க் உங்களுக்கு தித்திப்பான பலனை கொடுக்கும்.

 

  • விவாதம், ஆலோசனை மற்றும் முடிவெடுத்தல் (Discuss vs Decision Making) என வரும்பொழுது, எப்போதும் முடிவெடுக்க முயலுங்கள். விவாதம் ஒரு நல்ல முடிவை தராது. முடிவெடுங்கள், அந்த முடிவை நல்ல பயனாக மாற்றுங்கள் (No one decision is better).

 

  • தொழிலில் தவறு (Mistakes) என்பது ஒரு பெரிய குற்றமில்லை. தவறு செய்தால் தான் நீங்கள் தொழிலை சரியாக அணுகுகிறீர்கள் என அர்த்தம். தவறு செய்தால் மட்டுமே நீங்கள் தொழிலில் வெற்றியடைய முடியும்.

 

  • சொந்த ஊரில் தொழில் செய்வதை விட, தொழில் வாய்ப்பு அதிகமுள்ள சூழ்நிலையை தேர்வு செய்யுங்கள் . வீட்டை விட்டு வெளியே வர உங்கள் மனதுக்கு சொல்லுங்கள். மிகப்பெரிய வெற்றியடைய நீங்கள் மாற்றத்திற்கும் தயாராக வேண்டும் (Be out of Comfort Zone).

 

  • உங்கள் தொழில் மற்றும் சிந்தனைகளுக்கேற்ற நண்பர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் பால்ய நண்பர்கள் என்பதற்காக நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை( Choose Good contacts and friends).

 

  • உங்கள் நேரத்தை வீணடிக்கும் நபர்களிடமிருந்து விலகி செல்லுங்கள் (Avoid not related to you).

 

  • நீங்கள் ஆரம்பிக்கும்  தொழிலில் ஏழை மற்றும் அனுபவம் ஏதும்  இல்லாதவருக்கு  வாய்ப்பு  கொடுங்கள். அவர்களால் தான்  உங்களுக்காக  உண்மையாக  உழைக்க முடியும் (Employment for Poor and Freshers). நீங்கள்  ஒரு தொழிலில்  வெற்றி வேண்டுமென  நினைத்தால், ஒரு முதலாளியிடம் எந்த  சம்பளமும் வாங்காமல், கற்றலுக்கு  மட்டுமே  முக்கியத்துவம்  கொடுங்கள். அது  உங்களை  பெரும் முதலாளியாக்கும்(Learn to earn).

 

  • ஏற்கனவே  இருக்கும்  வேலையை விட்டு  விட்டு நீங்கள்  தொழில் செய்ய விரும்பினால், தொழிலுக்கு  தேவையான முதலீட்டை முன்னரே  சேமியுங்கள் (Create Emergency fund).

 

  • தொழில் ஆரம்பத்தில்  கடன்  எதுவும்  அதிகம் பெற  வேண்டாம். ஏற்கனவே  உங்களுக்கு  கடன்  இருந்தால், அதனை அடைத்து  விட்டு தொழில் தொடங்குவது  நல்லது (No Debt – No EMI).

 

இரண்டாம் தொழில்முனைவோர்களுக்கு (Second Generation Entrepreneurs) பெற்றோர் கற்று கொடுக்க  வேண்டியது…

 

  • உங்கள்  பிள்ளைகளுக்கு  எளிமையாக  வாழ (Frugality)  கற்று  கொடுங்கள். ஆடம்பரம்  வேண்டாம்.

 

  • ரிஸ்க் எடுக்க சொல்லி  கொடுங்கள். தவறுகளிலிருந்து பாடம்  கற்று கொடுங்கள்(Risk taking ability).

 

  • அவர்களுக்கு  உங்களின் தொழில் ஆலோசனை எதுவும்  தேவையில்லை (Don’t advise). உங்கள்  பிள்ளைகளை அவர்களாகவே  சிந்திக்க  கூறுங்கள்.

 

  • பிள்ளைகளுக்கு  சேமிப்பதின் அவசியத்தை சொல்லுங்கள் (Ask them to save).

 

  • உறவினர்கள் என்ன  நினைப்பார்கள்  என்ற  கவலை  வேண்டாம்(Avoid Neighborhoods words). உங்கள் குழந்தைகளை வெளி உலகுக்கு செல்ல அனுமதியுங்கள். வாய்ப்புகள் வெளியே  காத்திருக்கிறது (Don’t being Homesick).

 

மேலும் டாக்டர் வேலுமணி கூறும் போது, “ பொதுவாக ஏழையாக பிறந்தவர்கள் தான் பின்னாளில் பணக்காரராக மாறுகிறார்; ஒரு பணக்காரர் தான் பின்னாளில் ஏழையாக உள்ளார். இரவும், பகலும் போல இதுவும் நடக்கும். அதனால் ஏழையாக உள்ளோருக்கு வாய்ப்புகள் எப்போதும் காத்திருக்கிறது. விடா முயற்சியே வெற்றியின் கல்” எனவும் கூறினார்.

 

“ If you are born as poor, you have a 100 % chance of being  Rich “

 

தொழில் செய்வதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. ஆனால் நாம் நம் தொழில் சார்ந்த நபர்களுடன் தோழமை கொள்கிறோமா என்பதே இங்கு வெற்றிக்கான விடை. நாம் மேலே சொன்ன பத்து சிந்தனைகளை உங்கள் வாழ்விலும் பொருத்தி பாருங்கள். உங்கள் தொழிலிலும் வெற்றி நிச்சயம்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement