அடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0
Fundamental Analysis Factors or Financial Ratios
நினைவில் கொள்ளுங்கள் – “ பங்குச்சந்தை ஒரு தொழில்; நீங்கள் அந்த தொழிலில் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர். “
இந்த வகுப்பின் அவசியமே தொழில் தான்.
நமது தேநீர் நண்பர் தொழிலை போல… நண்பர் என்பதற்காக நாம் நம் பணத்தை கொடுத்து விட முடியாது. நமக்கு அவரின் தொழில் மிகவும் முக்கியம். அதை விட அவரின் தொழில் கணக்குகள் ( நிதி அறிக்கைகள்) மிகவும் அவசியமான ஒன்று. நாம் சில வகுப்பிற்கு முன் பார்த்த ஒரு தொழிலின் வரவு – செலவு, லாப – நட்ட கணக்குகள் தான் இங்கே பயன்பட போகிறது. அதாவது ஒரு நிறுவனம் அல்லது தொழிலின் நிதி அறிக்கையை மிக எளிமையான முறையில் நாம் கண்டறிந்து கொள்ள இந்த விகிதங்கள் உதவுகிறது. இதனை காரணிகள் (Financial Ratios or Factors) எனவும் பெயரிடலாம்.
நிதி அறிக்கைகள் சம்மந்தமான விகிதங்கள் அல்லது காரணிகள் பல இருப்பினும், நமக்கு ஒரு நிறுவனத்தின் பங்கினை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான முக்கிய காரணிகளை பார்ப்போம்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காரணிகள் 10 (Factors – 10):
- EPS (Earning Per share) – பங்கின் மீதான வருமானம்
- P/E (Price to Earning per share) & P/B (Price to Book Value)
- Sales & Profit – விற்பனை மற்றும் லாபம்
- PEG (P/E to Growth)
- ROE (Return on Equity) & ROA (Return on Assets)
- Debt Free
- ICR (Interest coverage ratio)
- Dividend Yield & Dividend Payout
- Cash Flow
- Intrinsic Value ( Margin of Safety)
நாம் மேலே சொன்ன 10 முக்கிய காரணிகள் தான் அடிப்படை பகுப்பாய்வுக்கான அவசியம். ஒரு தொழிலின் மதிப்பை இதன் மூலம் கண்டறியலாம். அடுத்து வரும் ஒவ்வொரு வகுப்பிலும் இந்த காரணிகளை பற்றி நடைமுறையோடு (Practical Way) ஆராய்வோம்.
உங்களுக்கான நடைமுறை பயிற்சிக்காக ஒரு மாதிரி – இருப்பு நிலை அறிக்கை மற்றும் வருமான அறிக்கையை பாருங்கள்.
Sample of Balance sheet and Income Statement:
(Image and Data Courtesy: http://www.accounting-basics-for-students.com/ )
Sample Balance Sheet:
Sample Income Statement:
உங்கள் பங்கு மீதான வருமானத்திற்கு (EPS) தயாராகுங்கள். அடுத்த வகுப்பில் சந்திப்போம்.