டிசம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.2 % ஆக உயர்ந்தது
Retail Inflation rises to 5.2 % – December 2017
மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical office -CSO) சமீபத்தில் வெளியிட்ட பணவீக்கம் பற்றிய தகவல்கள்:
(image and data courtesy: tradingeconomics.com )
- நாட்டின், டிசம்பர் (2017) மாதத்திற்கான சில்லறை (Retail Inflation) பணவீக்கம் 5.2 % ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 4.88 சதவிகிதமாகவும், அக்டோபர் 2017 ல் 3.58 % ஆகவும் இருந்தது.
- இந்த சில்லறை பணவீக்கம் நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில்(Consumer price index – CPI) வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாத பணவீக்கம் கடந்த 17 மாதங்களில் இல்லாத அதிகரிப்பாக உள்ளது. இதற்கு முன் கடந்த 2016 ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்த பணவீக்க விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உணவு பணவீக்கம் – 4.85 % ஆகவும், ஆடைகள் மற்றும் காலணிகள் பணவீக்கம் – 4.8 % ஆகவும், வீட்டு வசதி – 8.25 %, எரிபொருள் மற்றும் ஒளி – 7.90 % ம் உள்ளது.
- பாரத ரிசர்வ் வங்கி (4.3 – 4.7 %) எதிர்பார்த்த அளவினை விட, டிசம்பர் மாத பணவீக்கம் அதிகரித்ததால் வரும் நிதிக்கொள்கையில் வட்டி விகித மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் பாரத ஸ்டேட் வங்கி(SBI), இது தாங்கள் எதிர்பார்த்த விகிதம் தான் என கூறியுள்ளது.
- பாரத ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக்கொள்கையை வரும் பிப்ரவரி 7 ம் தேதி அறிவிக்க உள்ளது.
- கடந்த 5.2 % பணவீக்க அதிகரிப்பு – உணவு பொருட்களின் விலை தாக்கம் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றம் தான் காரணங்கள் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை