ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய 7 வடிப்பான்கள்
7 Filters before starting your business
நேற்று (21.01.2018) விகடன்(Vikatan) குழுமம் சார்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் நடைபெற்ற, “தொழில் தொடங்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் புதிய தொழில்முனைவோர்க்கான வழிகாட்டுதல்கள், சிந்தனைகள்(Business startup) பல பகிரப்பட்டன. சிறப்பு விருந்தினர்களாக Cavinkare நிறுவனத்தின் தலைவர் திரு. C.K . ரங்கநாதன், Naturals(India’s No.1 Hair Salon) நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு. குமரவேல் மற்றும் CADD காரையடி செல்வன், Wassup பாலச்சந்தர், ஆடிட்டர் சத்யா குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தொழில்முனைவோர்களுக்கான (Entrepreneurs Ideas) புதிய யுக்திகளையும், தொழில் உரிமைகளை (Franchise Global Business) பயன்படுத்துவதையும் மற்றும் பிற தொழில் செய்ய ஊக்கமூட்டும் விஷயங்களை அவர்கள் பகிர்ந்தனர்.
தொழில் முனைவோர் சிந்தனையின் விளைவாக 800 க்கும் அதிகமானோர் அரங்கத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முக்கிய தாக்கமாக திரு. C.K. ரங்கநாதன் அவர்களின், “ தொழிலை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை” கவனிக்கப்பட்டன.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய 7 வடிப்பான்கள் ( 7 Filters before starting a business ) by Cavinkare C.K, Ranganathan
- பெரும்பாலும், உங்களது முயற்சியை (Effort based) சார்ந்த தொழிலாக அமைய வேண்டும்.
- குறைந்த முதலீட்டை (Low Capital / investment) கொண்டு தொழில் ஆரம்பிக்க வேண்டும்.
- தொழிலில் புதுமையை புகுத்துமாறு (Innovative but useful for consumers) அமைய வேண்டும், அதே நேரத்தில் அது மக்களுக்கு, நுகர்வோருக்கு பயனளிக்குமா என்பதையும் கவனிக்க வேண்டும்.
- தொழிலை பெரிதாக்க, விரிவுபடுத்தக்கூடிய(Scalable Business) சாத்தியங்கள் வேண்டும்.
- தொழிலின் ஆரம்பத்தில் கிடைக்கும் லாப விகிதம் அதிகமாக (High Profit Margin) இருக்க வேண்டும். அப்போது தான் நாம் தொழில் ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் நம்மால் தொழிலில் நிலைக்க துணை புரியும்.
- தொழிலின் உயர் மதிப்பை (Value Creation) உருவாக்குதல். நமது தொழிலை ஏதேனும் சமயத்தில் நாம் மற்றவர்க்கு விற்க வேண்டிய நிலையிருந்தால், நமது தொழிலின் மதிப்பு நாம் உருவாக்கியதை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
- தகவல் தொழில்நுட்ப புரட்சியால் (Effect of Online Business) பிற்காலத்தில் நம் தொழில் பாதிக்கப்படுமா என்பதையும் ஆராய வேண்டும்.
மேலே உள்ள 7 வடிப்பான்கள், ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும், புதிதாக தொழில் செய்ய ஆர்வமுள்ளோருக்கும் பயனாக அமையும்.
இந்த கட்டுரை சம்மந்தமான உங்கள் பார்வை / கருத்துக்களை இங்கே பதிவிடலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை