இன்போசிஸ் (Infosys) நிகர லாபம் 38 % உயர்ந்தது
Infosys Q3FY18 Result (2017-18) Net profits at 38 %
- நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸின் (Infosys) 2017 – மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் 38 % ஆக உயர்ந்தது.
- சமீபத்தில் தனது காலாண்டு (Oct – Dec’ 2017) அறிக்கையில் வெளியிட்டதாவது: நிகர லாபம் ரூ. 5129 கோடி. இந்த லாபம் கடந்த காலாண்டினை காட்டிலும் 38 சதவிகிதம் அதிகமாகும்.
- நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி திரு. சலீல் பரேக் (Salil Parekh) கூறுகையில், நிறுவனம் ஒவ்வொரு ஆண்டிலும் 8 % வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், கடந்த மூன்றாவது காலாண்டு அறிக்கை மிகவும் ஆரோக்கியமாகவும்(Strength) உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- இதே காலகட்டத்தில் நிறுவன வருவாய் (Revenue) 1.3 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 17,794 கோடியாக உள்ளது.
- வரி செலவுகளும் காலாண்டு – காலாண்டு (QoQ) ஒப்பிடுகையில் ரூ. 1,471 கோடியிலிருந்து குறைந்து, தற்போது ரூ. 144 கோடியாக உள்ளது.
- இந்த காலாண்டு வளர்ச்சி பெரும்பாலும் சில்லறை, தளவாடங்கள் (Logistics), ஆற்றல் (Energy), தகவல் தொடர்பு மற்றும் பிற சேவைகள் மூலமே பெற்றவை ஆகும். அதே சமயத்தில் நிதி சேவை மற்றும் காப்பீடு சம்மந்தமான துறையில் வளர்ச்சி விகிதம் 0.3 அளவு குறைந்துள்ளது.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை