LIC tops in the list of Insurance – IRDA Claim Settlement Ratio 2017
LIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம்
- IRDA (Insurance Regulatory and Development Authority of India) 2016-17 ஆண்டு அறிக்கையில் (Annual Report) வெளியிட்ட தகவலில், மற்ற காப்பீடு நிறுவனங்களை காட்டிலும் LIC (Life insurance corporation) புகார் நிலுவை விகிதத்தில் குறைவாய் இருப்பதாகவும், Claim Settlement விகிதத்தில் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
- 2016-17 ஆண்டு அறிக்கையில், LIC Claim Settlement ratio – 98.31 % மற்றும் புகார் நிலுவை விகிதம் 0.97 ஆக உள்ளது. தனி நபர் இறப்புக்கான உரிமை கோருதலில் 0.97 விகிதம் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.
(Image courtesy: www.richinvestingideas.com Data Source: IRDA Official website )
- தனியார் காப்பீடு நிறுவனங்களின் (கூட்டாக) Claim settlement ratio – 93.72 % ஆக உள்ளது. உரிமை நிராகரிக்கப்பட்ட விகிதம் 4.85 ஆக இருக்கிறது.
- LIC ல் க்ளைம் செய்யப்பட்ட காலத்தில் மொத்த காப்பீடுகளின் எண்ணிக்கை 7,65,472 மற்றும் கோரிய தொகை ரூ. 10,815 கோடி ஆகும்.
- தனியார் மற்றும் பொது காப்பீடு நிறுவனங்கள் சேர்த்து, தனி நபர் இறப்புக்கான உரிமை கோராமல் இருக்கும் விகிதம் 2016-17 ல் 0.34 % ஆக இருக்கிறது.
- பொதுவாக IRDA அறிக்கையின் படி, உரிமை கோருதல் விகித (Claim Settlement Ratio ) அடிப்படையில் LIC நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் இது நிறுவனத்தின் அனைத்து வகையான பாலிசிகளுக்கும் பொருந்தாது. LIC காப்பீடு நிறுவனம் பொதுவாக Endowment Policy களை தான் அதிகம் விற்பனை செய்கிறது மற்றும் க்ளைம் விகிதமும் அதனை சார்ந்தே இருக்கும். இங்கு டேர்ம் பிளான்கள் (Term Insurance) கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை
Sir
Please Publish Daily any Reports related to Stockmarket,Finance ,Banking or Any other Major Economic Activities in india
LikeLike
தங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம் மற்றும் வரும் நாட்களில் தினசரி பதிவுகளை பகிர முயற்சிக்கிறோம்.
(We really appreciate your comment. We will try the best to publish daily related on your request.)
நன்றி, வர்த்தக மதுரை
LikeLike