ரியல் எஸ்டேட் தெரியும், எஸ்டேட் பிளானிங் தெரியுமா ?

 

ரியல் எஸ்டேட் தெரியும், எஸ்டேட் பிளானிங் தெரியுமா ?

Estate Planning

 

நமது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் நாம் சம்பாதித்த பணத்தை கொண்டு பணம் சேர்ப்பது என முடிவாயிற்று. அதாவது நம் செலவுகளுக்கான பணம் சேர்ப்பது.

 

பணம் கொண்டு பணம் சேர்ப்பது என்றால் என்ன ?  நமது வருமானத்தில் ஒரு சிறு பகுதியை சேமித்து அதனை முதலீடு செய்து கிடைக்கும் பலனை பெறுவதாகும். முதலீடு எப்படி செய்வது மற்றும் பல்வேறு முதலீட்டு கருவிகளை (Bank Deposits, Bonds, PPF, Mutual Funds, Stocks, Real Estate, Gold, etc) எப்படி பயன்படுத்துவது என  நாம் அறிவோம். முதலீடு என்பது இலக்குகளை நிர்ணயித்து செய்யப்பட வேண்டும்; நமது இலக்குகளுக்கான ஒரு திட்டமும் நம்மிடம் இருக்க வேண்டும். பின்பு அந்த திட்டத்தினை செயல்படுத்த நாம் நமது வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி (அ) சேமித்து பல முதலீட்டு கருவிகளில் (Investment Products) முதலீடு செய்ய வேண்டும். சரி நம்மிடம் இலக்குகள், திட்டமும் மற்றும் முதலீடும் உண்டு. முதலீடும் செய்தாயிற்று; அப்புறம் என்ன என்கிறீர்களா ?

 

அப்புறம் தான் முக்கியம் ! நாம் எந்த நோக்கத்திற்காக (அ) யாருக்காக இலக்குகளை நிர்ணயித்து திட்டம் தீட்டி முதலீடு செய்தோமோ, அந்த பயன் அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்கோ (அ) நபருக்கோ போய் சேர வேண்டுமல்லவா ? அதற்கு தான் இந்த ‘Estate Planning’ என்ற தோட்ட திட்டமிடல். நாம் ஒரு விவசாயத் தோட்டத்தினை கொண்டுள்ளது போன்று.

 

எஸ்டேட் பிளானிங் பற்றி திரு. ரால்ப் W. சாக்மேன் சொல்வது போல…

 

“What makes greatness is starting something that lives after you.”

 

 

Estate Planning… refers to the Organized approach to managing the accumulated assets of a person in the interest of the intended beneficiaries.

 

செல்வம் சேர்க்கப்படலாம் ஒரு திட்டமிடப்பட்ட இலக்குகளுடன். ஆனால் நாம் சேர்த்த செல்வம் / சேர்க்கப்படும் செல்வம் உங்கள் வாரிசுகளையோ, அமைப்பையோ (அ) எவருக்கோ அது சரியான முறையில் அடையாளம் காட்டப்பட்டு, சேர வேண்டும். அதற்கு தான் பண மற்றும் சொத்து விஷயத்தில் வாரிசுகளை (Nomination, Heirs) இணைப்பது பெரும்பாலும் கட்டமாயிற்று; இந்த ஒருங்கிணைக்கப்பட்டும், ‘Estate Planning’ பின்னாளில் வரும் நடைமுறை சிக்கல்களை எளிதாக்குகிறது; இன்று பெரும்பாலான நிலம் மற்றும் மற்ற சொத்து சம்மந்தமான வழக்குகள் வாரிசுகள் சார்ந்த பிரச்சனையாகவே உள்ளது. ஆதலால் பணம் சேர்ப்பதை விட தனக்கு பின் அது யாருக்கு, எங்கு போய் சேர வேண்டுமென்பது அவசியம். சொத்து சார்ந்த வரிகளுக்கும் இது பொருந்தும், கடன்களுக்கு தான் !

 

 

 

எஸ்டேட் பிளானிங் எப்படி செய்வது ? (Tools for Estate Planning)

 

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதற்கிணங்க நாம் நலமுடன் இருக்கும் போதே நமக்கு பின்னால் நாமினியை, வாரிசை நியமிப்பது நமது கடமை.

 

  1. உயிருடன் இருக்கையில் (During the Lifetime) :

 

  • Joint Holding
  • Family Settlement
  • Trust
  • Gift
  • Power of Attorney
  • Mutation

 

(B) நமக்கு (இறப்பிற்கு) பின் (After Death):

 

  • Will
  • Nomination

 

 

  • உயில் (Will):

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

“ Legal declaration of the intention of the testator with respect to his property, which he desires to be carried into effect after his death”

 

உயில் என்பது ஒருவரின் இறப்பிற்கு பின் செயல்படுத்தப்படுவது; உயில் எழுதுபவர்(Testator) தான் உயிருடன் இருக்கையில் தனது உரிமைகளை (சட்டபூர்வமாக, மாற்றக்கூடிய) தனக்கு பிறகு யாருக்கு போய் சேர வேண்டும் என பதிவு செய்வது. பதிவு செய்தல் என்பது வெறும் எழுத்து பூர்வமாகவோ (அ) சட்டப்படியான பதிவாகவோ இருக்கலாம்; சட்டபூர்வமாக பதிவு செய்தல் ஒரு பாதுகாப்பான முறையாகும். இல்லையென்றால் பெவிகால் (Fevicol) விளம்பரத்தில் வருவது போல ஆகி விடக்கூடாதல்லவா 🙂

உயில் எழுதுவதற்கு, இந்த வயதில் தான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உயில் எழுதுபவர் பொதுவாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் அவர் உயில் உருவாக்கும் போது சுய நினைவோடு இருத்தல் (Of Sound mind) வேண்டும்.

 

சட்டபூர்வமாக உயில் பதிவு செய்தல் பாதுகாப்பு மட்டுமன்றி, யாரும் அதனை அழித்து விடவோ, திருடவோ, துஷ்ப்ரயோகம் செய்யவோ முடியாது. உயில் எழுதுபவர் தான் சுய சிந்தனையில் இருக்கும் போது  மட்டுமே அதனை பதிவு செய்ய முடியும். உயில் எழுதுபவரின் சுய கையொப்பம் மற்றும் இருவரின் சாட்சியும் அமைய வேண்டும்.

 

 

பரிந்துரை (Nomination):

 

ஒருவர் தனக்கான சொத்திற்கோ (அ) முதலீட்டிற்கோ தனது இறப்பிற்கு பிறகு யார் அதனை உரிமை கோருவது (Nominee) என்பதை Nomination மூலம் நியமிக்கலாம். தனி நபர் மட்டுமே நாமினியை தேர்வு செய்ய முடியும். நாமினிகள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். நாமினிகளின் தேர்வை ஒரு முதலீட்டாளர் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறையும் மாற்றி கொள்ளலாம்.  வங்கி கணக்கு, பரஸ்பர நிதி, பங்குகளுக்கு நாமினியை நியமிப்பதுண்டு. பொதுவாக ஒரு உயில் பதிவு நாமினியை விட மேலாக கருதப்படும்.

 

கூட்டு (Joint Holding) :

 

Joint Holding என்பது ஒரு குடும்பத்திலுள்ள யாரேனும் ஒரு நபரை தனது கூட்டாக நியமிப்பது; உதாரணமாக தங்கள் வங்கி கணக்குகளுக்கு, Demat கணக்கிற்கு, சொத்து மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு நியமிப்பதாகும். முதலாமவரின்  (Registered / First Holder) இறப்பிற்கு பின் Joint Holder ஆக நியமிக்கப்பட்டவர் இறந்தவருக்கு அடுத்து அவரது சொத்தினையோ, முதலீட்டையோ பயன்படுத்தலாம். Joint Holder குடும்பத்தாரராக அல்லாமல் இருந்து, இறந்தவரின் வாரிசுகள் முறையிட்டால் அது சட்டத்திற்கு உட்பட்டது.

 

 

குடும்ப தீர்வு (Family Settlement):

 

சொத்து தகராறு இல்லாத குடும்பம் எங்கண்ணே, என்கிறீர்களா ?

 

சொத்து சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க தான் நாம் பரஸ்பரமாக, சட்டபூர்வமாகவும் குடும்பத்தாருக்கு Settlement பங்கை பகிர்ந்தளித்தல்  குடும்பத்தில் அமைதியும், நம்பிக்கையும் ஓங்க செய்யும். Family Settlement ஒப்பந்தம் வாய்மொழியாகவோ (அ) எழுத்துபூர்வமாகவோ இருக்கலாம்; தேவைப்படின் பதிவு செய்தல் நலம்.

 

அதிகாரம் / அங்கீகாரம் பெற்ற நபர் (Power of Attorney -POA):

 

உங்கள் தொழில், சொத்து (அ) முதலீட்டிற்கான பரிமாற்றத்திற்கு ஒருவரை POA ஆக நியமிப்பது. அதாவது தனக்கு பதிலாக மற்றொருவர் தனது முதலீட்டை, சொத்தை இயக்குவதற்கு அதிகாரம் அளித்தல். இது பொதுவாக பங்குகளில் செயல்படுத்தப்படும்.

 

மாற்றமடைதல் (Mutation):

 

நாம் மற்றொருவரிடம் இருந்து ஒரு சொத்தினை பெறும் போது (அ) குடும்பத்திலுள்ள நபருக்கு சொத்து மாறும் பொழுது, பெறுபவரின் பெயருக்கு தேவையான உரிமைகள், தகவல்கள் சரியாக மாற்றப்பட்டு விட்டனவா என அறிவது. இது பிற்காலத்தில் நமது வருமானம் சார்ந்த வரி சுமையை எளிதாகும். வருவாய் அலுவலகத்தில் தகவல்கள் அனைத்தும் சரியாக மாற்றப்பட்டுள்ளதா என பார்த்து கொள்ள வேண்டும்.

 

 

 

GST, Aadhaar மற்றும் PAN என நம்மையும், நமது வருமானத்தையும்  சார்ந்த தகவல்கள் ஒருங்கிணைக்கும் நேரத்தில், நாம் ‘எஸ்டேட் பிளானிங் ‘ செய்வதை தவிர்க்க முடியாது. தற்போது சில விஷயங்களுக்கு இந்த எஸ்டேட் பிளானிங் கட்டாயமில்லை என்றாலும், பிற்காலத்தில் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆக, நமக்கு ஒரு ஒருங்கிணைந்த நிதி சார்ந்த, சட்டபூர்வமான அணுகுமுறையை இந்த திட்டமிடல் ஏற்படுத்தி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. நமது வாரிசுகளும் வளமாக வாழ வழிவகை செய்கிறது இந்த தோட்டத் திட்டமிடல் என்னும் ‘Estate Planning’.

 

நமது குடும்பம் நம்பிக்கையில் (நம் கையில்) !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

(image source: pennmutual.com)

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s