முதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா ?
Have you made Investment Insulation ?
கடந்த சில அத்தியாயங்களில் நாம் முதலீடு பற்றியும், முதலீட்டுக்கான வாய்ப்புகளையும், ரிஸ்க் தன்மை பற்றியும் மற்றும் அதனை எவ்வாறு பரவலாக்குவது என்பதனையும் பார்த்தோம். ‘Investing’ என்ற முதலீட்டு சிந்தனையை நாம் பெற்று விட்டோம்; சரி, இப்போது உடனே முதலீட்டில் இறங்க வேண்டியது தானே ! கையில் ரூ. 10,000 (அ) 1,00,000 /- உள்ளதே, அப்புறம் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்கிறீர்களா ? அது தான் இங்கு சிக்கலே. மழை வெள்ளம் வரும் முன்னேரே பாதுகாத்திருக்கலாம் என தோன்றுகிறது, அதை தான் நாம் இங்கும் யோசிக்க வருகிறோம்; கையில் பணம் இருப்பதெல்லாம் சரி, முதலீடு செய்வதெல்லாம் சரி தான், முதலீடு ரிஸ்க்கையும் சமாளித்து விடலாம்; அதனை பற்றி நமக்கு சிறிது தெரியும். ஆனால் இயற்கையாக வரும் சில ரிஸ்க் இருக்கிறதல்லவா ? அதிலிருந்து நாம் நம் முதலீட்டை காக்க வேண்டுமல்லவா ? பணம் போனால் சம்பாதித்து விடலாம், பணம் சம்பாதிப்பவரே சிரமத்திற்கு உள்ளானால் (எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு, அதிக கடன், உடல் நலம் சரியில்லாமை) ! அதற்கு தேவை தான் ‘முதலீட்டு காப்பு’ என்ற ‘Investment Insulation’. பயிர்க்காப்பீட்டை போல…
முதலீட்டு காப்பு எப்படி ?
முதலீட்டு காப்பை, ‘Networth’ என்று சொல்லப்படும் நிகரச்சொத்து மதிப்புடனும் ஒப்பிட்டு கூறலாம்.
முதலீட்டு காப்பு என்பது உங்கள் முதலீட்டின் மீதான விளைவுகளிலிருந்து உங்கள் அன்றாட (நிதி) வாழ்க்கையை பாதுகாக்க உதவுவது; நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு வருமானம் ஏதும் தராமலோ (அ) நஷ்டத்தையோ ஏற்படுத்தலாம்; அந்த சமயத்தில் உங்களது தினசரி பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் காப்பது அவசியம். இதை தான் நாம் முதலீட்டு காப்பு என்கிறோம்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முக்காப்பு அவசியம் (Three Insulators):
நீங்கள் பங்குச்சந்தை / மனை விற்பனை / ஏதேனும் ஒரு தொழிலில் முதலீடு செய்ய உள்ளீர்களா ?
அதற்கு முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது முக்காப்பு.
முதலீட்டு காப்புகள் | தேவைகள்/ பயன்கள் | |
1 | உங்களிடம் போதுமான இன்சூரன்ஸ் உள்ளதா ? | Term Policy, Health Insurance, Accident Cover – எதிர்பாராத விபத்து / உயிரிழப்பு, மருத்துவ செலவுகள் |
2 | அவசர கால நிதியை தயார் செய்து விட்டீர்களா ? | Savings of 6-10 Months Income – வேலையிழப்பு, மருத்துவ செலவு, பிற அவசர தேவைகள் |
3 | மாதச்சேமிப்பு எப்படி ? | RD, PPF, Mutual Fund SIP – நிதி இலக்குகளுக்கு – கல்வி மற்றும் திருமண செலவுகள், ஓய்வு கால நிதி ஒதுக்கீடு. |
முதலீட்டு காப்புகள்:
- காப்பீடு (Insurance – Term, Health, Accident Cover)
- அவசர கால நிதி (Emergency Fund – Savings of 6 – 10 Months)
- மாத சேமிப்பு / முதலீடு (Monthly Investing – RD, PPF, Mutual Funds SIP)
- தண்ணீரை சேமியுங்கள் (Save Water – Avoid wastage)
- மின்சாரத்தை சிக்கனமாக்குங்கள் (Consume Less – Electricity Power)
- மரம் நடுங்கள் (Save Nature – Planting Tree)
முதலில் மேலே நாம் சொன்ன காப்பை செய்து விட்டு தான், மற்ற அத்தியாயங்களில் நாம் சொன்ன வாய்ப்புகளை ஆரம்பிப்பது நன்று; நீங்கள் செய்யும் முதலீடு நஷ்டமடைந்தாலும், வருமானம் தர வாய்ப்பு இல்லையென்றாலும் மற்றும் ஏதேனும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டாலும் உங்கள் முதலீட்டு காப்பு உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாக்கும்.
முதலீட்டு காப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது சமுதாயத்திற்கான பலனும் தான்.
காப்புக்கு தயாராகுங்கள் கருத்துடன் 🙂
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !