Tag Archives: ter

முதலீட்டாளருக்கான பரஸ்பர நிதி செலவு விகிதம் அதிரடியாக குறைப்பு – செபி

முதலீட்டாளருக்கான பரஸ்பர நிதி செலவு விகிதம் அதிரடியாக குறைப்பு  – செபி

SEBI reduces total expense ratio for Mutual Fund Investors

 

முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் எனும் பரஸ்பர நிதி சேவையை பயன்படுத்துவதற்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வாக கட்டணமாக ஒரு தொகையை வசூலிப்பதுண்டு. இதனை மொத்த செலவின விகிதம்(Total Expense Ratio)  என்பர். இந்த செலவின விகிதத்தில் நிதி மேலாண்மை கட்டணம், பதிவாளர் கட்டணம், விற்பனை செலவு மற்றும் ஏஜென்ட் கமிஷன் ஆகியவை அடங்கும்.

 

பரஸ்பர நிதி செலவை அதன் சொத்துக்களில் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம் தான் மொத்த செலவின விகிதமாகும்(TER). பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்புக்கு ஏற்றார் போல் செலவின விகிதங்களை செபி (SEBI) வரையறுத்துள்ளது. அதிகபட்ச விகிதமாக இதுவரை 2.50 சதவீதம் மொத்த செலவின விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி அதிகபட்சமாக 2.25 % செலவின விகிதமாக இருக்கும். 50,000 கோடி ரூபாய்க்கு மேலான நிதி சொத்தினை நிர்வகிக்கும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிக்கு முன்னர் 1.75 சதவீதமாக இருந்தது. தற்போது செபி இதனை 1.05 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது.

 

பங்கு சார்ந்த நிதி திட்டங்களுக்கு இனி அதிகபட்சமாக 1.25 சதவீதமும் (முதிர்வு பெறும் – Closed Ended), மற்ற நிதி திட்டங்களுக்கு 1 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என செபி அறிவித்துள்ளது. அடிச்சுவடு கமிஷன் (Trail Commission) எனப்படும் முதலீட்டிற்கான வருடாந்திர செலவினை இனி அடிச்சுவடு மாதிரியாக (Trail Model) பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டுமெனவும் செபி கூறியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதி நிறுவனங்கள் வசூலித்து வரும் அதிகபட்ச மொத்த செலவின தொகை முதலீட்டாளருக்கு ஒரு பாதகமாக இருந்து வந்த நிலையில், தற்போது செபியின் இந்த நடவடிக்கை சிறு முதலீட்டாளருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. செபியின் இந்த விதிமுறை அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உதாரணத்திற்கு ரூ. 1 லட்சம் தொகையை மொத்தமாக ஒரு முறை பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவருக்கு பத்து வருட காலத்திற்கு பிறகு 15 சதவீதத்தில் முதிர்வு தொகையாக நான்கு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். அதே சமயத்தில் மொத்த செலவின தொகை 1.5 % ஆக இருக்கும் பட்சத்தில் அவருடைய வருமானம் 15 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறையும். அதிகபட்ச செலவின தொகை மற்றும் முன்கூட்டிய கமிஷன் (Upfront Commission) என்ற நிலையில் மட்டுமே பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்படக்கூடாது எனவும், முதலீட்டாளரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டுமென செபி அறிவுறுத்தியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி  

Change and Disclosure of Total Expense Ratio to Mutual Investors – SEBI

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது நிதி திட்டங்களை நிர்வகிக்க வருடாந்திர கட்டணமாக, முதலீட்டாளரிடம் ஒரு தொகையை வசூலிக்கும். இதனை செலவின விகிதம் (Expense Ratio) என்பர். பரஸ்பர நிதியில் ஒரு முதலீட்டாளருடைய மொத்த செலவு விகிதம் TER (Total Expense Ratio) எனப்படும்.

 

மொத்த செலவு விகிதம் என்பது ஒரு முதலீட்டாளர்(Mutual Fund Investor) நிதியை வாங்கும் போது, விற்கும் போது மற்றும் தணிக்கை செலவுகள், மற்ற இதர செலவுகளை உட்படுத்தும். இதனை ஒரு வருடத்தின் மொத்த செலவுகளை அந்த வருடத்திற்குரிய சராசரி மொத்த வருவாயில் வகுத்தால் கிடைக்கும் விகிதமாகும்.

 

கடந்த மாதம், செபி அமைப்பு(SEBI) பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு(Mutual Fund Companies) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதலீட்டாளருக்கு விதிக்கப்படும் மொத்த செலவு விகிதத்தை (TER) பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளருக்கு அவ்வப்போது குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல் (Email) மூலமோ தெரிவிக்க வேண்டுமென அறிவித்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது இணைய தளத்திலும் இது சம்மந்தமான தகவல்களை பகிர வேண்டும் எனவும், TER விகிதத்தில் மாற்றம் ஏதேனும் இருந்தாலும் அதனை உடனடியாக, அதாவது கட்டணம் விதிக்கப்படும் மூன்று வேலை நாட்களுக்கு முன்னரே (At least three working days prior to effecting such change)  முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

 

மார்ச் 31, 2018 க்கு பின்னர் அறிவிக்கப்படும் எந்த ஒரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும், அதற்கு முன்னர் இருந்த திட்டத்திற்கும் TER விகிதத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் என செபி தனது குறிப்பில் வெளியிட்டுள்ளது.

 

SEBI (Mutual Funds) Regulations, 1996 ன் படி, ஒவ்வொரு பரஸ்பர நிதியை நிர்வகிக்க (Sales & Advertising, Administrative Expenses, Transaction Cost, Management Fees, Custodian and Audit Fees) முதலீட்டாளரிடம் இருந்து ஒரு கட்டணம் பெறப்படும். ரூ. 100 கோடி வரையிலான வாராந்திர சராசரி நிகர சொத்துக்களை(Net Assets)  நிர்வகிக்கப்படும் சமபங்கு திட்டங்களுக்கு (Equity Schemes) மொத்த செலவு விகிதம் 2.5 % ஆகவும், அடுத்த 300 கோடிக்கு 2.25 % ஆகவும், அடுத்தடுத்த 300 கோடிக்கு 2 % ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு மேல் எந்த ஒரு பரஸ்பர நிதி நிறுவனமும் கட்டணங்களை விதிக்க கூடாது.

 

கடன் திட்டங்களுக்கு, பங்கு சார்ந்த(Equity) திட்டங்களை விட 0.25 % செலவின விகிதம் குறைவாக உள்ளது.  முதலீட்டாளரை பொறுத்தவரை தங்கள் பரஸ்பர நிதி திட்டத்தின் தேர்ந்தெடுத்தலில் Total Expense Ratio விகிதம் ஒரு முக்கியமானவை. நீண்ட காலத்தில், அதிக TER விகிதம் உள்ள திட்டத்தில் முதலீட்டாளரின் கணிசமான தொகை கட்டணத்திற்கு செல்லும். அதே நேரத்தில் ஒவ்வொரு நிதி திட்டத்தின் செயல்பாடுகளையும் மற்றும் அதன் பலன்களையும் பார்த்து விட்டு தான், ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

(Source:  Total Expense Ratio – Change and Disclosure )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com