Tag Archives: retail inflation

மே மாத சில்லரை விலை பணவீக்கம் (Retail Inflation) 3.05 சதவீதமாக உயர்வு

மே மாத சில்லரை விலை பணவீக்கம் (Retail Inflation) 3.05 சதவீதமாக உயர்வு

Inflation rose to 3.05 percent in May, but IIP growth up 3.4 percent in April 2019

 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) என்றழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 3.05 சதவீதமாக உள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது. மே மாதத்திற்கு சொல்லப்பட்ட பணவீக்கம் கடந்த 7 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத பணவீக்கம் 2.92 சதவீதத்திலிருந்து 2.99 சதவீதமாக சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டது. இருப்பினும் பணவீக்க விகிதம் கடந்த 10 மாதங்களாக  நிர்ணயிக்கப்பட்ட(RBI Policy) 4 சதவீத அளவிற்குள் தான் உள்ளது.

 

நாட்டின் பணவீக்க சராசரியை கணக்கிட்டால், கடந்த 2012ம் வருடம் முதல் 6.11 சதவீத சராசரியை கொண்டுள்ளது. முதலீட்டை மேற்கொள்ளும் ஒருவர் பணவீக்கத்தை சரிகட்டிய பிறகே, தனது மூலதன வருவாயை(Capital Gains) கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலோர் பணவீக்கத்தை தங்கள் குடும்ப பட்ஜெட்டில் சேர்த்து கொள்வதில்லை. இதன் காரணமாக கல்வி, திருமணம், ஓய்வு போன்ற நீண்ட கால நிதி இலக்குகளை சரியாக திட்டமிடுவதில் சிரமம் ஏற்படுவதுண்டு.

 

மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றின் பணவீக்கம் 8.12 சதவீதமும், காய்கறிகள் 5.46 சதவீதமும், பருப்பு வகைகள்(Pulses) 2.13 சதவீதமும் மற்றும் எண்ணெய், கொழுப்பு பொருட்கள் 0.91 சதவீதமாகவும் உள்ளது. அதே வேளையில் பழங்களின்(Fruits) சில்லரை விலை பணவீக்கம் 5.17 சதவீதமாக குறைந்துள்ளது.

 

பணவீக்கம் உயர்ந்து வந்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தின் தொழிற்துறை உற்பத்தி(Industrial Production) 3.4 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மாத காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்க தொழிலில்(Mining) குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

தொழில்துறை உற்பத்தி கடந்த 15 வருடங்களில் 6.28 சதவீதம் என்ற சராசரி அளவை பெற்றிருக்கிறது. வீட்டுமனை பணவீக்கம் மே மாதத்தில் உயர்ந்தும், ஆடைகள் மற்றும் காலணிகள் விலை குறைந்தும் காணப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நுகர்வோர் விலை பணவீக்கம் செப்டம்பரில் சற்றே உயர்வு – 3.77 %

நுகர்வோர் விலை பணவீக்கம் செப்டம்பரில் சற்றே உயர்வு – 3.77 %

CPI Inflation Slightly higher in September 2018 – 3.77 percent

 

உணவு பொருட்களின் விலை உயர்வால் கடந்த செப்டம்பர் மாதத்தின் சில்லரை பணவீக்கம் (CPI – Retail Inflation) 3.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.69 % அளவில் இருந்தது. சந்தையில் வல்லுநர்கள் எதிர்பார்த்த 4 % அளவை செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் எட்டவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

 

முன்னர், பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) கணித்த மதிப்பீட்டில் ஜூலை – செப்டம்பர் 2018 காலாண்டு முடிவில் சில்லரை விலை பணவீக்கம் 4.6 சதவீதமாக இருக்கும் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன் 4 சதவீதமாக மாற்றியமைத்தது. தற்போது இதன் மதிப்பீட்டில் சில்லரை பணவீக்கம் குறைவாகவும், அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது சற்றே உயர்ந்தும் காணப்படுகிறது.

 

உணவுப்பொருட்களின் (Food and Beverages) விலை 0.85 சதவீதத்திலிருந்து 1.08 சதவீதமாக உயர்ந்தது. பழங்கள் மற்றும் பால் பொருட்களின் விலை குறைந்தும், புகையிலை சார்ந்த பொருட்களின் விலை உயர்ந்தும் உள்ளது. பழங்களின் விலை 3.57 சதவீதத்திலிருந்து 1.12 % ஆக குறைந்தும், மீன் மற்றும் மாமிசத்தின் பணவீக்கம் 3.21 % லிருந்து 2.32 சதவீதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்தது.

 

பருப்பு வகைகளின் பணவீக்கம் (-8.58) சதவீதமாக காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதன் விலை (-7.76) இருந்தது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற பணவீக்கம் 3.34 சதவீதமும், நகர்புறத்தில் 4.31 சதவீதமும் உள்ளது. ஆகஸ்ட் மாத கிராமப்புற பணவீக்கம் 3.41 % ஆகவும், நகர்ப்புற விலைவாசி 3.99 சதவீதமாகவும் இருந்தது.

 

நுகர்வோர் விலை குறியீட்டு எண் 140.40 லிருந்து (ஆகஸ்ட் 2018) கடந்த மாதத்தில் 140.30 என்ற மதிப்பில் உள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கம் (Consumer Price Index) மதிப்பீடு கடந்த 2012 ம் ஆண்டை தொடக்க ஆண்டாகவும், அதன் அடிப்படை மதிப்பை 100 ஆகவும் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 3.69 சதவீதமாக குறைந்தது

நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 3.69 சதவீதமாக குறைந்தது

Consumer Price Index Inflation down to 3.69 percent in August 2018

 

காய்கறிகளும், பருப்பு வகைகளும் கடந்த சில மாதங்களாக விலை குறைந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் விலை (அ) சில்லரை பணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது. இந்த வருடத்தின் குறைவான சதவீதமாக ஆகஸ்ட் மாத பணவீக்கம் எடுத்து கொள்ளப்படுகிறது.

 

சில்லரை பணவீக்கம் (Retail Inflation) கடந்த ஜூலை மாதத்தில் 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 1.37 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் (Food) ஆகஸ்ட் மாதத்தில் 0.29 சதவீதமாக இருந்தது.

 

காய்கறிகளின் (Vegetables) பணவீக்கம் (-7) ஆக அமைந்தது. இது கடந்த ஜூலையில் (-2.20) ஆக இருந்தது. எரிபொருள் ஆகியவற்றின் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 8.47 சதவீதமாக உயர்ந்தது. எரிபொருள் பணவீக்க சதவீதம் கடந்த ஜூலையில் 7.96 % ஆகும்.

 

எரிபொருளின் (Fuel and Light) பணவீக்கம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இது அதிகமாகும். இதற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் ஒரு காரணமாக அமைகிறது. ஆகஸ்ட் மாத எரிபொருள் விலைவாசி கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவாகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பழங்கள் மற்றும் காய்கறிகளின் பணவீக்க குறைவு (0.29) கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவாக கொள்ளப்படுகிறது. துணிமணிகள் மற்றும் காலணிகள் பணவீக்க அளவு ஆகஸ்ட் மாதத்தில் 4.88 சதவீதமாகும். இது கடந்த ஜூலை மாதத்தில் 5.67 % ஆக இருந்தது.

 

வீட்டு சம்மந்தமான மளிகை பொருட்கள் மற்றும் சேவைகளின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 5.18 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முடிவில் 4.89 % ஆகும். ஆகஸ்ட் மாத பணவீக்க குறைவு, கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமடையும் நிலையில், வரும் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை (அக்டோபர் மாதம்) கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்

நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்

Fiscal Defit would be below budgeted level of 3.3 percent

 

2018-19 ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)  3.3 சதவீத அளவுக்குள் இருக்கும் என நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு முழுவதும், ஒதுக்கப்பட்ட 3.3 சதவீத அளவை விட நிதி பற்றாக்குறை குறைவாக இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களிலேயே ஒதுக்கப்பட்ட அளவில் 55 சதவீத அளவை எட்டியது. இந்த நிதி வருடத்தின் ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை விகிதம் நாட்டின் ஜி.டி.பி. (GDP) ல் 3.3 சதவீதம் என்ற போதிலும், 2017-18 இந்த அளவு 3.53 சதவீதமாக இருந்தது.

 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே மாத காலத்தில், நிதி பற்றாக்குறை அளவு ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இந்த அளவு, இந்த வருடத்தின்ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை அளவில் 55 சதவீதத்தை எட்டியது. நிதி பற்றாக்குறை என்பது பொதுவாக அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான அளவாகும்.

 

இந்த நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவை வரிகளின் (GST) வருவாய் ரூ. 13 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  2017-18 ம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதத்தில் நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவில் 68 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

 

தொழில் துறை தொழிலாளர்களின் பணவீக்கம் (Retail Inflation for Industrial Workers)  கடந்த மே மாதத்தில் 3.96 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.97 % ஆக இருந்தது. உணவு பொருட்களுக்கான சில்லரை பணவீக்கம் 1.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

மீன், கோழி, முட்டை, வெங்காயம், உருளை கிழங்கு, பால் மற்றும் நெய் போன்ற உணவு பொருட்கள் விலை உயர்ந்தும், கோதுமை, மாம்பழம், வெண்டை, மற்றும் கடுகு எண்ணெய் போன்றவை விலை குறைந்தும் காணப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மார்ச் மாத சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018

மார்ச் மாத  சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018

Retail Inflation India eases to 4.28 % on March 2018

 

2017-18 ம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் நாட்டின் சில்லரை பணவீக்க விகிதம் 4.28 % ஆக இருந்தது. கடந்த பிப்ரவரி 2018 மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த பணவீக்கம் 0.16 சதவீதம் குறைவாகும். பிப்ரவரி மாதத்தில் சில்லரை பணவீக்கம் 4.44 % ஆகவும், ஜனவரி மாதத்தில் 5.07 % ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மார்ச் மாத பணவீக்கம் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 5 மாத குறைவாகும். உணவு  பொருட்களின் விலை குறைவால் இந்த பணவீக்க விகிதம் ஏற்பட்டதற்கான காரணமாக உள்ளது.

 

உணவுப்பொருட்களின் பணவீக்கம் கடந்த மாதத்தில் 2.81  சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.26 சதவீதமாகவும் இருந்தது. எரிபொருள் மற்றும்  மின்சார பணவீக்கம் 5.73 % ஆக இருந்தது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.8 % ஆக நிலை கொண்டிருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

காய்கறிகளின் பணவீக்கமும் 17.57 சதவீதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 11.7 % சதவீதமாக சரிந்தது. அதே நேரத்தில் பழங்களின் பணவீக்கம் 4.8 % லிருந்து 5.78 சதவீதமாக உயர்ந்தது.

 

துணிமணி  மற்றும் காலணிகள் பணவீக்கம் 4.91 % இருந்தது. இதுவே பிப்ரவரியில் 5 சதவீதம் என்ற அளவில் அமைந்தது. பருப்பு வகைகளின் பணவீக்கம் -17.35 % லிருந்து மார்ச்சில் -13.41 சதவீதமாக இருந்தது.

 

இடைக்கால பணவீக்க விகித முறையில், கிராமப்புற பகுதிகளில் 4.44 % ஆகவும், நகர்ப்புற பகுதிகளில் 4.12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com