Tag Archives: interest rate july 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஜூலை மாத வட்டி விகிதங்கள் – 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஜூலை மாத வட்டி விகிதங்கள் – 2019

Small Savings Scheme Interest rates for the Period – July to September 2019

 

அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின்(Small Savings) ஜூலை – செப்டம்பர் மாத காலத்திற்கான வட்டி விகிதங்கள் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

 

கடந்த ஜனவரி-மார்ச் மற்றும் ஏப்ரல்-ஜூன் மாத கால வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில், தற்போது 10 புள்ளிகள் (0.10) என்ற அளவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen) ஐந்து வருட சேமிப்பு திட்டத்தில் 8.70 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 8.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏப்ரல்-மார்ச் காலாண்டில் 8 சதவீதமாக இருந்த தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), ஜூலை-செப்டம்பர் காலத்திற்கு 7.90 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. செல்வமகள்(Sukanya samriddhi) திட்டத்திலும் வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைவாக உள்ளது. முன்னர் 8.50 சதவீதமாக காணப்பட்ட செல்வமகள் திட்டம் தற்போது 8.40 சதவீதமாக அமையும்.

Small Savings Interest Rate july 2019

 

குறைக்கப்பட்ட அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலில்(July-Sep 2019) வரும். சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் மத்திய நிதி அமைச்சகத்தால்(Ministry of Finance) மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும்.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(EPF) கடந்த முறை 8.65 % என்று இருந்த வட்டி விகிதம் இம்முறையும் தொடரும் என தெரிகிறது. 2015-16ம் நிதியாண்டில் 8.8 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், கடந்த 2018-19ம் நிதியாண்டில் 8.65 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.

 

சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான சேமிப்பு உள்ளதாகவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆறு கோடிக்கும் மேலான சந்தாதாரர்கள் உள்ளதாக அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

Advertisement