பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு
Stock Market – Fundamental Analysis – 30 Hrs Sweet Spot Course
இந்திய பங்குச்சந்தையின் வரலாறு நீண்ட காலமானது. மும்பை பங்குச்சந்தையின் வயது சுமார் 140 வருடங்களுக்கு மேல். வணிகத்தை பிரதானமாக கொண்டது தமிழகமும், நமது நாடும். நாம் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தாலும், முன்னர் பார்த்திருந்தாலும் அடிப்படையில் நாம் ஒரு தொழில்முனைவோர்களே.
வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியதுமானது. அதனை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளில் வேலை தேடுவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதே அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். அது போல தான் பங்குச்சந்தையிலும். ஊக வணிகத்தில் பணம் பண்ணுகிறேன் என கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது ஆரோக்கியமானதல்ல.
பங்குச்சந்தைக்கும், நாட்டில் உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெருமளவிலான தொடர்பு உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை காணலாம். தொட்டுணர கூடியதல்ல, பங்குச்சந்தை முதலீடு. ஆனால் நீங்கள் தொட்டுணர்ந்து பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் சேவைகளிலும் பங்குச்சந்தை நிறுவனங்கள் தான் உள்ளது.
பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களை நமது தொழில் போல பாவித்து, அதன் அடிப்படை திறன்களை அலசி ஆராய்ந்து நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதே சிறந்தது. நல்ல நிறுவனங்களை கண்டறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கற்றலுடன், நிறுவனங்களின் நிதி அறிக்கைகள்(Financial Reports) மற்றும் நிர்வாகத்தை(Management) மதிப்பிடுவது அவசியமாகும்.
இதற்கு ஒரு முதலீட்டாளராக நமக்கு தேவைப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என சொல்லப்படும் அடிப்படை பகுப்பாய்வு தான். பங்குச்சந்தையின் வர்த்தக ஏற்ற – இறக்கத்திற்கு அனைத்துமான மூதாதை தான் அடிப்படை பகுப்பாய்வு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் நம்மிடம் சிறிதளவு பண உதவி கேட்டாலே யோசிக்கும் நாம், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும்.
வெறுமென பங்குகளை வாங்கி வைத்தால், லாபமோ அல்லது செல்வத்தையோ ஏற்படுத்த முடியாது. அதற்கான விதை சரியாக இருப்பது அவசியமாகும். வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு வகுப்பை துவங்க உள்ளோம். பங்குச்சந்தையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? அப்படி செய்யாவிட்டால் நாம் சம்பாதிக்கும் பணம் யாரோ ஒருவரால் முதலீடு செய்யப்பட்டு, அவர் பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்பு ஏன் ஏற்பட்டது ?
சரியான விலையில் பங்குகளை வாங்குவது எப்படி ?
சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வேறுபாடு என்ன ?
பங்கு முதலீட்டில் நஷ்டத்தை எவ்வாறு தவிர்க்கலாம் ?
மதிப்புமிக்க முதலீட்டாளர்களின்(Value Investors) செல்வத்தை நாமும் பெறுவது எப்படி ?
பங்குகள் மூலம் எவ்வாறு சொத்துக்களை(Financial Assets) ஏற்படுத்தலாம் ?
மோசமான நிர்வாகத்தையும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பங்குகளையும் கண்டறிவது எப்படி ?
பங்குச்சந்தையில் கூட்டு வட்டியின் மகிமை(Power of Compounding) என்ன ?
பணத்தின் மூலம் பணம் பண்ணும்(Money works for you) உண்மை சூத்திரம் என்ன ?
வாருங்கள், இது போன்ற கேள்விகளுக்கான விடையாக பங்குச்சந்தை அடிப்படை கற்றலை ஏற்படுத்துவோம்.
பதிவு செய்ய…
Stock Market – Fundamental Analysis Course – Registration
கட்டணம்: ரூ. 4,500/-
இணைய வகுப்பு சலுகை(Online Course): ரூ. 2250/- மட்டுமே
பதிவுக்கு பின் வகுப்புக்கான நாள் மற்றும் நேரம், இணைப்பு ஆகியவை உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.
புத்தகத்தின் வாயிலாக மட்டுமே கற்க விரும்புபவர்களுக்கு…
நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – How to pick the right stock in the Share market ?
புத்தக விலை: ரூ. 228/- மட்டுமே
உரிமை துறப்பு(Disclaimer):
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு (வகுப்புக்கள்) பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கற்றலுக்கு மட்டுமே. வகுப்புக்களில் சொல்லப்படும் பங்குகள் யாவும் மாதிரியாகவே(Examples) சொல்லப்படும். அவை வாங்க கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய பங்குகள் அல்ல. வர்த்தக மதுரை ஒரு நிதி சேவை(Financial Advisory Services) சார்ந்த நிறுவனம் ஆகும். நடத்தப்படும் வகுப்புகளுக்கு சான்றிதழ்கள், தரவரிசைகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது.
இது ஒரு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை வகுப்பு, தகவல் மற்றும் கற்றலுக்கு மட்டுமே.
பங்குகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய லாப, நஷ்டங்களுக்கு இந்த தளம் பொறுப்பல்ல. பங்குகளில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகரை அணுகுவது அவசியமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை