SBI Cards IPO 2020

வெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு ?

வெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு ?

Will the SBI Cards IPO get Success – Initial Public Offering ?

ஒரு தொழிலை துவங்குவது எளிதான விஷயமல்ல, அதே வேளையில் அதனை முடியாத காரியமாக நாம் காண முடியாது. ஒரு புதிய தொழிலை துவங்குவதில் முதலீடு திரட்டுவது என்பது எதிர்பார்க்கும் தன்மையே. தொழில் ஆரம்பிப்பதற்கான முதலீட்டை தனது சேமிப்பிலிருந்தோ, குடும்பம் மற்றும் உற்றார்-உறவினர்களின் மூலம் பெறுவதை சிறுவிதை நிதி(Seed Capital) என கூறலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சில வேளைகளில் கூட்டு நிதியும், சிறு முதலீட்டாளர்களின் நிதியும்(Crowd Funding & Angel Investing) சிறுவிதை நிதியாக அழைக்கப்படலாம். இதற்கடுத்தாற் போல துணிகர முதலீடு(Venture Capital), தனியார் மூலதனம்(Private Equity) என்ற முதலீட்டு முறைகளும் உண்டு. இதனை சார்ந்து தொழில் நிறுவன அமைப்பும் மாறுபடும். ஆரம்ப காலத்தில் தனியுரிமை கொண்ட தொழில்(Proprietorship), பின்னர் கூட்டு முயற்சி, தனியார் நிறுவனம் முதல் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம் வரை செல்லும்.

பொதுவெளியில் முதலீடு திரட்ட முயற்சிக்கும் நிறுவனம், பொது நிறுவனமாக பதிவு செய்வது அவசியமாகும். முதலீடு செய்யும் நபர்களுக்கு பங்குகளை ஒதுக்குவது நிறுவனத்தின் கடமையாகும். பங்குச்சந்தைக்கு ஒரு நிறுவனம் வருவதால், வட்டியில்லாத கடன் பெறுவது போன்றதாகும். முதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கு பங்குகளை வழங்குவதால், அவர்களுக்கு நிறுவனத்தின் லாப-நஷ்டத்தில் பங்கு உண்டு.

அதே வேளையில், நிறுவனத்தின் நிறுவனருக்கு நிதி சார்ந்த பொறுப்புகள் மிக குறைவு. நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட அந்த நிறுவனம் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பங்குகள் முதன்மை சந்தையில் வெளியீடு செய்யப்படும். ஆனால், இரண்டாம் சந்தையில்(Secondary Market) தான் வர்த்தகமாகும். நல்ல நிறுவனங்களின் பங்குகளை முதன்மை சந்தை வெளியீட்டில் பெறுவோர், இரண்டாம் சந்தையில் விற்று விட்டு லாபம் காண்பர். இது சரியில்லாத நிறுவனங்களுக்கும் சில சமயங்களில் லாபத்தில் அமையலாம்.

சமீபத்தில் ஐ.பி.ஓ. வெளியீட்டில் வந்த ஐ.ஆர்.சி.டி.சி(IRCTC). பங்கு ஒன்றின் விலை ரூ. 320 ஆக இருந்தது (வெளியீட்டு தேதி: அக்டோபர் 3, 2019). தற்போது இந்த பங்கின் விலை ரூ. 1900 க்கும் மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதுவும் வெளியீட்டிலிருந்து ஐந்து மாதத்துக்கும் குறைவான காலத்தில், ஆறு மடங்கு விலையில் – 500 சதவீதத்திற்கு மேல் லாபம் !

இது எல்லா பங்குகளிலும் நடைபெற வாய்ப்பில்லை. ஐ.ஆர்.சி.டி.சி. ஒரு மத்திய அரசின் நிறுவனமாக மட்டுமில்லாமல், நாட்டின் ரயில்வே துறையில் உள்ள ஏகபோக(Monopoly) நிறுவனமாகும். இதற்கு ரயில் பயண சீட்டு சேவையில் போட்டியாளர்கள் யாருமில்லை என்பது கவனிக்கத்தக்கது. இனி வருங்காலத்தில், தனியார் நிறுவன ரயில் சேவைகளும், அதனை சார்ந்த வருவாயும் வந்தால் மட்டுமே ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திற்கு போட்டியாக அமைய முடியும்.

கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட டி.மார்ட் (Avenue Supermarts – DMart) நிறுவனம், ஐ.ஆர்.சி.டி.சி. வெளியீட்டை போல நடந்தது. அன்று பங்கு ஒன்றுக்கு ரூ. 299 என்ற விலையில் இருந்த டி.மார்ட் நிறுவன பங்கு இன்று ரூ. 2500க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால், அதே வருடத்தில் வெளிவந்த மற்ற நிறுவன பங்குகள் அவ்வளவாக ஏற்றம் பெறவில்லை. சில நிறுவனங்கள் அதன் வெளியீட்டு விலையை விட குறைவாக தற்போது வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

பொதுவாக, முதலீட்டு ஜாம்பவான் திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) ஐ.பி.ஓ. வெளியீட்டில் பங்குகள் வாங்குவதை விரும்புவதில்லை. ஐ.பி.ஓ. வெளியீட்டில் பங்குகளை வாங்கி, இரண்டாம் சந்தையில் உடனடியாக லாபம் பார்த்தாலும், நீண்டகாலத்தில் ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கையை அலசுவது முக்கியமாகும்.

வங்கிகள் அல்லாத நிதி சேவை துறையில் பதிவு செய்யப்பட்ட எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் & பேமென்ட் சேவை(SBI Cards & Payments) நிறுவனம் கடந்த 1998ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்தாண்டு எஸ்.பி.ஐ. கார்டு நிறுவனம் ‘ 9 மில்லியன் கார்டுகள் ‘ கிளப்பில் இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி 74 சதவீத பங்குகளையும், கார்லைல் குழுமம் 26 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கிறது.

2018-19ம் நிதியாண்டில் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,286 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 862 கோடியாக உள்ளது. ஐ.பி.ஓ. வெளியீடு வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி, மார்ச் 5ம் தேதி முடிவடையும். முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 10 ஆகவும், நிறையளவு(Lot Size) ஒன்றுக்கு 19 பங்குகளும், பங்கு ஒன்றின் விலை ரூ. 755 (750-755) என சொல்லப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை என இரண்டு சந்தைகளிலும் வெளியிடப்படும் இந்த பங்கு இரண்டாம் சந்தைக்கு மார்ச் 13ம் தேதி வெளிவரும். திரட்டப்படும் நிதி ரூ. 8500 கோடி. நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு சேவையில் இதன் பங்களிப்பு 18 சதவீதமாகும். ஏற்கனவே எஸ்.பி.ஐ. நிறுவன பங்குகளை வைத்திருப்போருக்கு பங்குகளில் சலுகை அறிவிக்கப்படலாம்.

வளர்ந்த நாடாகவும், நுகர்வோர் தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் இடமாகவும் நம் நாடு இருப்பதால், நிதி சார்ந்த சேவையில் இந்த நிறுவனம் ஐ.பி.ஓ. வெளியீட்டில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொருளாதாரம் மந்தமடைந்து கிரெடிட் கார்டு பெற்றவர்கள் முறையாக தவணையை செலுத்த தவறும் பட்சத்தில், இந்த நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s