Yes Bank Rana Kapoor

யெஸ் வங்கி வெளியேற்றம் – நிப்டி 50 குறியீட்டு பங்குகள் மாற்றம்

யெஸ் வங்கி வெளியேற்றம் – நிப்டி 50 குறியீட்டு பங்குகள் மாற்றம் 

YES Bank excluded from Nifty 50 – Changes on NSE Indices

 

தேசிய பங்குச்சந்தை குறியீடு பராமரிப்பு துணைக்குழு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று பங்குச்சந்தை குறியீடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தேசிய பங்குச்சந்தையின் கீழ் 28 நிப்டி குறியீடுகளும்(Nifty Indices), 17 துறை சார்ந்த குறியீடுகளும்(Sectoral Indices) உள்ளன. நிப்டி பொதுத்துறை நிறுவனங்கள், நிப்டி வங்கி, நிப்டி நிதி சேவை, நிப்டி ஆட்டோ, நிப்டி ஐ.டி., நிப்டி நுகர்வோர் பொருட்கள் என 17 துறை சார்ந்த பிரிவுகள் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

துணைக்குழு சார்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள பங்குகள் வரும் மார்ச் 27ம் தேதி முதல் அமலுக்கு வரும். தேசிய பங்குச்சந்தையின் முதன்மை குறியீடான நிப்டி 50(Nifty50) பட்டியலிலிருந்து யெஸ் வங்கி நீக்கப்பட்டுள்ளது. நிப்டி 100 குறியீட்டில் இருந்தும் யெஸ் வங்கி நீக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி நிப்டி மிட்கேப் 150 குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

யெஸ் வங்கியின்(YES Bank) சந்தை மதிப்பு ரூ. 9,000 கோடியாகும். கடந்த ஒரு வருட அதிகபட்ச விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 286ம், குறைந்தபட்சமாக 29 ரூபாய்க்கும் வர்த்தகமாகி உள்ளது. தற்போது யெஸ் வங்கியின் பங்கு விலை ரூ. 35 ஆக உள்ளது. நிறுவனத்தின் கடன் பொறுப்புகள் சுமார் 6.58 லட்சம் கோடி ரூபாய்.

 

நிப்டி 50 குறியீட்டில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள ஒரே பங்கு யெஸ் வங்கி மட்டுமே. இதற்கு பதிலாக ஸ்ரீ சிமெண்ட் லிமிடெட்(Shree Cement) சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தாற் போல் உள்ள நிப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் அசோக் லேலண்ட், இந்தியா புல்ஸ் ஹௌசிங், எல் & டி. பைனான்ஸ் ஹோல்ட்டிங்ஸ், ஸ்ரீ சிமெண்ட், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அதானி டிரான்ஸ்மிஷன், ஐ.டி.பி.ஐ., இன்போ எட்ஜ், எல் & டி இன்போடெக், டோரன்ட் பார்மா ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

 

நிப்டி 500 குறியீட்டில் திவான் ஹௌசிங், லட்சுமி விலாஸ் வங்கி, பி.சி. ஜுவல்லரி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் உட்பட 20 நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது. நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீட்டில் கிராபைட் இந்தியா, எச்.இ.ஜி.(HEG), இங்கர்சோல் ரேண்ட், ஏரிஸ்(Eris Lifesciences), புளூடார்ட் ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 

 

நிப்டி டிவிடெண்ட் வாய்ப்புகள் 50 குறியீட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பங்குகள் – அசோக் லேலண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ், எம் பேஸிஸ், எம்.சி.எக்ஸ். இந்தியா, நெஸ்லே, கெயில், ஹெக்சாவேர் உட்பட 16 நிறுவனங்களாகும். இந்த குறியீட்டில் ஏற்கனவே இருந்த எச்.இ.ஜி., சியென்ட், இந்துஸ்தான் ஜிங்க், கர்நாடகா வங்கி, வேதாந்தா ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம் உட்பட 16 நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது.

 

2019ம் ஆண்டின் எப்.ஐ.ஏ. வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, உலகின் மிகப்பெரிய ஊக வணிக(Derivatives) சந்தையாக தேசிய பங்குச்சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்கு வர்த்தக அளவின் படி, உலகின் மிகப்பெரிய மூன்றாவது சந்தையாகவும் தேசிய பங்குச்சந்தை உள்ளது.  நாட்டின் மிக பழமையான சந்தையாக மும்பை பங்குச்சந்தை உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.