US IranWar Tensions Soleimani

ஈரான் – அமெரிக்க நாடுகளின் போர் பதற்றம் இந்தியாவிற்கு பாதகமாகும்

 ஈரான் – அமெரிக்க நாடுகளின் போர் பதற்றம் இந்தியாவிற்கு பாதகமாகும்

War Panic – Iran and US tensions would hurt India’s Economy

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்க விமான தாக்குதலால் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி சுலைமானி(Soleimani) கொல்லப்பட்டார். இதன் காரணமாக இரு நாடுகளிடையே போர் பதற்ற சூழல் நிலவுகிறது. போர் போன்ற சூழல்கள் ஏற்பட்டாலும், தற்போதைய நிலையில் இரானிடம் அதனை கையாள போதிய நிதி ஆதாரம் இல்லை என சொல்லப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இரு நாடுகளிடையே எண்ணெய் வளம், ஆக்கிரமிப்பு சார்ந்த பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளது. முன்னொரு காலத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை அழிக்க முற்பட்டன. பின்னர் அது தோல்வியடைந்ததை அடுத்து, ஈராக் அதிபர் சதாம் உசைனை ஈரான் மீது தாக்குதல் நடத்த ஏவி விட்டது வல்லரசு நாடான அமெரிக்கா. 

 

இப்படி எண்ணெய் வளத்தை(Crude Oil) கையகப்படுத்த, எல்லையில் பதற்ற நிலை அவ்வப்போது ஏற்பட்டு கொண்டிருந்தது. நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முதல் மூன்று  இடங்களை பிடித்திருப்பவை – சவூதி அரேபியா, ஈராக் மற்றும் ஈரான் நாடுகள். கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு தேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

தற்போதைய சூழ்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளின் தாக்குதலும் ஈராக்கில் தான் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என சொல்லப்படுகிறது. உட்கட்டமைப்பு மற்றும் ஆற்றலில்(Energy) நாம் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி காணாத நிலையில், இது போன்ற நிகழ்வு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.

 

வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளிடையே ஏற்படும் பாதகமான நிகழ்வு, கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க செய்யலாம். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றங்கள் உள்நாட்டில் ஏற்படலாம். போர் பதற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் தங்கத்தின் விலையும்(Gold Prices) கடந்த இரு தினங்களாக உயர்ந்து காணப்படுகிறது.

 

அடுத்த மாதம் நாட்டின் பட்ஜெட் தாக்கல் இருக்க கூடிய நிலையில், எதிர்பாராது நடக்கும் நிகழ்வால் நாட்டின் பணவீக்கத்தில் குறுகிய காலத்தில் மாற்றம் இருக்கலாம். வளைகுடா நாடுகளில் சுமார் 85 லட்சம் இந்திய குடிமக்கள் பணிபுரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

இப்போதும் இருக்கும் காலகட்டத்தில், ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் உறவை பேணவே இந்தியா விரும்புகிறது. அங்கு அசாதாரண சூழல் நிலவாமல் இருப்பது, ஒவ்வொரு நாடுகளுக்கும் நலன் பயக்கும். குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s