interest rate

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – ஜனவரி 2020

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – ஜனவரி 2020

Small Savings Scheme Interest rates for the Period – January to March 2020

அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள், நடப்பு ஜனவரி மாதம் முதல் மார்ச் 2020 வரையிலான காலாண்டுக்குரியதாகும். சமீபத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இதனையடுத்து வட்டி விகிதத்திலும் அரசு முன்னெச்சரிக்கையாக இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜனவரி – மார்ச் 2020 காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், கடந்த அக்டோபர் – டிசம்பர் 2019 காலத்திலிருந்த வட்டி விகிதங்கள் தான் தற்போதும் சொல்லப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருட காலமாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

சேமிப்பு கணக்குக்கு(Savings Account), சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்பு(Senior Citizen Savings Scheme) திட்டத்தில் வட்டி விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஜனவரி 2019 காலத்தில் 8.7 சதவீதம் என சொல்லப்பட்டிருந்தது.

ஐந்து வருட ஆர்.டி.(RD) சேமிப்பு திட்டத்திற்கு 7.2 சதவீதமும், செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.4 சதவீதமும் சொல்லப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான(NSC) வட்டி விகிதம் 7.9 சதவீதம். இது கடந்த ஜனவரி 2019 காலாண்டில் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Small Savings interest rate January 2020

பொது வருங்கால வைப்பு நிதி(PPF) திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவீதம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 500 ரூபாய் சேமிப்பது அவசியம். இது ஒரு ஓய்வு கால திட்டமாகும். வருமான வரி சலுகையும் இத்திட்டத்திற்கு உண்டு. 

ஒரு வருட கால அளவிலான வைப்பு திட்டத்திற்கு 6.9 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது. இது 2 வருட மற்றும் 3 வருட திட்டங்களுக்கும் பொருந்தும். 5 வருட வைப்பு திட்டத்திற்கு மட்டும் 7.7 சதவீத வட்டி வழங்கப்படும். கிசான் விகாஸ் பத்திரம்(KVP) மற்றும் மாதாந்திர வருமான திட்டம்(Monthly Income Scheme)  போன்ற திட்டங்களுக்கு 7.6 சதவீதம் என்ற அளவில் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட வட்டி விகிதம் நடப்பு 2020 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை உள்ள காலத்திற்காகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.