150 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத சாதனை, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி
First time in 150 years on Zero Fatality Rate in Indian Railways
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் நிறுவனமான இந்தியன் ரயில்வே(Indian Railways), உலகின் நான்காவது பெரிய ரயில் நிறுவனமாகும். 1853ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்திய ரயில்வே துறை தினசரி 20,000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளையும், 13 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்திய ரயில்வே பாதையின் நீளம் சுமார் 67,300 கிலோ மீட்டர் மற்றும் மொத்த தடத்தின் நீளம் சுமார் 1,21,400 கிலோமீட்டர் (மார்ச் 2017 நிலவரப்படி). 2018-19ம் நிதியாண்டின் முடிவில் ரயில்வே துறையின் வருவாய் 1.97 லட்சம் கோடி ரூபாய். சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 6000 கோடி ரூபாய்.
18 மண்டலங்களை கொண்டுள்ள இந்திய ரயில்வே துறை CRIS, RITES, CONCOR, IRCON, IRCTC, RVNL, IRFC, NHSRCL, DFCCI, RAILTEL மற்றும் MVRC ஆகிய 10 துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியது. இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக இயக்கப்பட்ட ரயில், தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது கூடுதல் சிறப்பம்சம்.
ரயில் பயணம் அனைவருக்கும் சுகமானதாக இருந்தாலும், தாமதம் மற்றும் கூட்ட நெரிசல் ஆகியவை பெரும்பாலானவர்களை பயணங்களில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அது போல எதிர்பாராத ரயில் விபத்துகளும், பெருமளவிலான உயிர்சேதத்தை ஏற்படுத்தும்.
1990-1995 கால கட்டங்களில் ரயில் விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக 500 பேர் இறக்க நேரிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் இறப்பு விகிதங்கள் குறைவாக இருந்தாலும், அது ஒரு ஆபத்தான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ரயில் விபத்துகளால் உயிர் சேதம் மட்டுமில்லாமல், அதற்கான இழப்பீடு தொகையும் அரசாங்கத்தால் அதிகளவில் செலவு செய்யப்பட்டது.
இதனை காரணமாக கொண்டு, ரயில்வே துறையில் சமீப வருடங்களாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கான காப்பீட்டை(Travel Insurance) பெறும் வகையிலும் வசதி செய்யப்பட்டது. இதனால், பயணிகளின் பயணமும் காப்பீடு தொகையால் பாதுகாக்கப்பட்டது. சிக்னல் கோளாறுகள், விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிகைகள் என பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் ரயில்வே துறையின் கவனம் ஈர்க்கப்பட்டது.
2017-18ம் நிதியாண்டில் 73 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2018-19ம் ஆண்டில் 37 ஆக குறைந்தது. அதாவது 40 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை விட, 94 சதவீத குறைபாடுகள் சொல்லப்பட்ட காலத்தில் தீர்க்கப்பட்டன. 1980 கால கட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்திருந்த நிலையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் 59 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன.
இதனை விட ஆச்சர்யம் என்னவென்றால், நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதுவரை எந்த ஒரு ரயில் விபத்துகளிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்திய ரயில்வே வரலாற்றில் இது போன்ற நிகழ்வு, முதன்முறையாக தற்போது நடந்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் பயணிகளுக்கான சுகமான மற்றும் பாதுகாப்பான பயணமாக, இந்திய ரயில் போக்குவரத்து அமையும் என எதிர்பார்க்கலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மலைப்பிரதேச ரயில் பயணங்களை மகிழ்விக்க ஏற்கனவே விஸ்டாடோம்(Vistadome Coach) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் விமான சேவை தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில் சேவைகளும் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன. இது வெற்றி பெற்றதையடுத்து, இந்திய ரயில்வே துறை உலகளவிலான மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.
நாடு முழுவதும் மின்சார சேவை(Electricity) மற்றும் இரட்டை பாதை வேலைகள் முடியும் தருவாயில், ரயில் பயணங்கள் பெருமளவிலான நகர்ப்புற சாலை நெரிசல்களை குறைக்கும் எனலாம். உயர்ரக சேவையில் கட்டணம் அதிகம் இருக்கலாம் என்பதனை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், குறுகிய தூரங்களுக்கான ரயில் சேவையும் சலுகை கட்டணத்தில் ரயில் பயணிகளை மகிழ்விக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை