தனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய்
Private Train Tejas Express earns revenue of nearly Rs. 3.70 Crore in First Month
முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரயில் கடந்த 2017ம் ஆண்டு இந்திய ரயில்வே துறையால் துவங்கப்பட்டது. பயணிகளின் பொருட்களை வைப்பதற்கான சிறப்பு வசதி, எல்.இ.டி. டிவி(LED TV), செய்தித்தாள்கள், ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் முன்னுரிமை என பல சிறப்பம்சங்களை கொண்டு இந்த ரயில் இயங்கி வந்தது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆரம்ப கட்டத்தில் மும்பை முதல் கோவா வரை தொடங்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) சேவை, பின்னர் சென்னை – மதுரை இடையே இரண்டாவது தேஜஸ் சிறப்பு ரயில் கொண்டு வரப்பட்டது. எல்.எச்.பி.(LHB Rake) என்ற சிறப்பு பேட்டி, 180 கி.மீ. வேகம், தானியங்கி கதவு, சி.சி.டிவி, புகைபிடிப்பதை கண்டறிவதற்கான அலாரங்கள், பயணிகளுக்கான அதிகபட்ச காப்பீடு என பாதுகாப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த ரயில் சேவை வழங்கப்பட்டது.
நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பிராண்டுடன் கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) நிறுவனத்தால் முதல் தனியார் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் சேவை லக்னோ – டெல்லி இடையே இருந்தது. இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனம் தான் ஐ.ஆர்.சி.டி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் கடந்த மாதம் இந்திய பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி உள்ள நிலையில், இதன் நிதி சார்ந்த தகவலும் தற்போது உத்தேசமாக வெளிவந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் வாரத்திற்கு ஆறு நாட்கள் சேவை என கணக்கில் கொண்டு, மொத்தம் 21 நாட்கள் ரயில் சேவை அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் டிக்கெட் விற்பனை மூலம் 3.70 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும், நிறுவனத்தின் செலவினம் 3 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மாதத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை ஈட்டிய லாபம்(Net Profit) ரூ. 70 லட்சம். நாளொன்றுக்கு டிக்கெட் விற்பனை அடைந்த மதிப்பு சராசரியாக 17.50 லட்சம் ரூபாய். வரவிருக்கும் காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் விரிவான அறிக்கைகளை காணலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை