8500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் யெஸ் வங்கி
YES Bank had received a Binding offer of Rs. 8500 Crore
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு தற்போது 18,000 கோடி ரூபாயாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதன் மதிப்பு ரூ. 70,000 கோடிக்கு மேலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குடும்ப பிரச்னையாக ஆரம்பித்து பின்னர் நிறுவனர்களிடையே சலசலப்பு, இயக்குனர் குழுவிலும், தலைமை பதவியிலும் முரண்பாடு என நிர்வாக குறைபாட்டால் யெஸ் வங்கியின் பங்கு கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் ஆட்டம் கண்டது.
கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் இந்த பங்கின் விலை 400 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி இருந்தது. 2017ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 10 ரூபாய் முக மதிப்பை(Face Value) கொண்டிருந்த யெஸ் வங்கி 2 ரூபாய் முக மதிப்பாக பிரிக்கப்பட்டது. அப்படியெனில், அதன் பங்கு விலை சொல்லப்பட்ட காலத்தில் 2000 ரூபாய் பெறுமானம் என சொல்லலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
யெஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர வாராக்கடன் விகிதம் 3 சதவீதத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த வங்கியின் விற்பனை வளர்ச்சி கடந்த காலங்களில் நன்றாக இருந்தாலும், வாராக்கடன் அளவு மற்றும் போதிய நிதி இல்லாததும் வங்கியின் லாப வளர்ச்சியை பாதித்துள்ளது.
நிறுவனர் ராணா கபூர் தனது பெரும்பாலான பங்குகளை விற்று விட்டார் என்றே சொல்லலாம். தற்போது தலைமையில் உள்ள திரு. ரவ்நீத் கில்லின்(Ravneet Gill) இலக்கு வங்கிக்கான முதலீட்டை பெறுவது மட்டுமே. மிக வேகமாக வளர்ந்து வரும் வங்கியாகவும், தனியார் வங்கிகளில் எச்.டி.எப்.சி. வங்கிக்கு அடுத்ததாகவும் சொல்லப்பட்ட யெஸ் வங்கி முதலீடுகளை பெற்று, சரியான நிர்வாகத்தை கொண்டு வருமா என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு.
நேற்று (31-10-2019) சந்தைக்கு யெஸ் வங்கியினால் தெரிவிக்கப்பட்ட தகவல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (8500 கோடி) எனவும் கூறியுள்ளது.
செபியிடம்(SEBI) இதற்கான ஒப்புதலை யெஸ் வங்கி பெறும்பட்சத்தில், அதற்கான வளர்ச்சி பாதைக்கு வங்கி செல்லக்கூடும். யெஸ் வங்கியின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் இன்று (01-11-2019) வெளிவர உள்ள நிலையில், இந்த பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படும்.
யெஸ் வங்கியின் பங்கு விலை கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 120 சதவீதம் விலையேற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 63 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. முதலீட்டை ஈர்க்க(Global Investment) உள்ள செய்தியால், நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கின் விலை 24 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை