வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?
How to repay your Housing loan Smartly ?
இன்றைய காலத்தில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ ஒரு கனவு என்றால், அதனை வீட்டுக்கடனாக பெற்று மாத வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த 20-30 வருடங்களுக்கு தவணையாக செலுத்துவது பெரும்பாடாக உள்ளது. நீங்கள் கடனாக வாங்கிய வீடு, அதாவது வீட்டுக்கடன் மூலம் அடைந்த வீடு உங்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு தான் சொந்தமாக கருதப்படும். அதுவரை அந்த வீடு ஒரு கடனாக(Liability) தான் வங்கியால் அங்கீகரிக்கப்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேவைக்கு ஒரு வீடு இருப்பது நல்லது, அதே வேளையில் நன்றாக சம்பாதிக்கிறேன், வரி சேமிப்புக்காக(Tax Savings) வீட்டுக்கடன் வாங்குகிறேன் என இரண்டு, மூன்று வீடுகளை வாங்க முயன்றால் அது நமக்கு ஒரு செலவினத்தை தான் தரும். அதுவும் ஒரு நீண்டகால கடனை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.
உங்களிடம் அதிகப்படியான பணம் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, வீடுகளை வாங்கி விற்பனை செய்தல் மற்றும் வீடுகளை பெருமளவில் வாடகைக்கு விட்டு, அதிகப்படியான வருமானத்தை ஈட்டுபவராக இருந்தால் நீங்கள் இந்த பதிவை படிக்க தேவையில்லை. உங்கள் நேரத்தை தொழிலில் செலுத்தலாம்.
நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலானோர் நிதிச்சிக்கலில் மாட்டிக்கொள்வது வருவாயில் 50 சதவீதத்திற்கும் மேல் கடனை கொண்டிருப்பது தான். வீட்டுக்கடன்(Home Loan), தனி நபர் கடன்(Personal Loan), வாகன கடன் என கடன் பட்டியல் நீளும். இருப்பினும், கடனை நாம் சாமர்த்தியமாக அடைப்பதே நமக்கான கட்டாய இலக்காகும்.
உதாரணமாக ஒருவர் வீட்டுக்கடனாக(Housing Loan) ரூ. 25 லட்சத்தை பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 9.60 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. நமது தவணைக்காலம் 30 ஆண்டுகள். அப்படியெனில், நமது மாத தவணைத்தொகை ரூ. 21,204 (அடுத்த 30 வருடங்களுக்கு).
இப்போது நமது கடன் மதிப்பீட்டை பார்ப்போம். ரூ. 25 லட்சத்தை 9.60 சதவீத வட்டியில் நாம் கடனாக பெற்றுள்ள போது, 30 வருடங்களில் நமது வட்டி தொகை மட்டும் (அசலை தவிர்த்து) 51,33,440 ரூபாய். அதாவது நமது மொத்த தவணை தொகை (ரூ. 21,204 X 30 வருடங்கள் அல்லது 360 மாதங்கள்) – ரூ. 76,33,440. வீட்டுக்கடனில் நாம் கட்ட வேண்டிய வட்டி தொகை மட்டும் 67 சதவீதமாகும்.
இதுவே நாம் வாங்கிய வீட்டுக்கடனை அதே வட்டி விகிதத்தில், 20 வருடங்களில் கட்டி முடிக்க நினைத்தால், மாத தவணை தொகை ரூ. 23,467. செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ. 31,32,080. அதாவது மொத்த தொகையில் வட்டியின் பங்களிப்பு 55 சதவீதமாகும். ஆக, தவணை காலத்தை அதிகரிக்கும் போது, நமது தவணை தொகை குறைவாக இருப்பினும், செலுத்த வேண்டிய வட்டி தொகை அதிகரிக்கும். கடனை விரைவாக செலுத்த வேண்டிய நிலையில், நமக்கான தவணை தொகை அதிகமாகி, வட்டி தொகை குறையும்.
இங்கு நாம் இரு நண்பர்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். ராமன்(X), ரவி(Y) இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரே காலத்தில், தங்களுக்கான வீட்டுக்கடனை பெறுகிறார்கள். அவர்களது வீட்டுக்கடன் தொகையும், வட்டி விகிதமும் ஒன்று தான். ஆனால், தவணை காலம் மட்டும் மாறுபடுகிறது. ராமன் தனது 25 லட்சம் ரூபாய் வீட்டுக்கடனை 9.60 சதவீத வட்டியில் 20 வருடங்களில் செலுத்த உள்ளார். அதே சமயத்தில், ரவி தனக்கான தவணை காலத்தை 30 வருடங்களாக திட்டமிட்டுள்ளார்.
ராமனின் வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொகை ரூ. 23,467 மற்றும் ரவியின் தவணை தொகை ரூ. 21,204. இருவருக்கும் மத்தியில் உள்ள இடைவெளி தொகை ரூ. 2263 ( 23,467 – 21,204). அதாவது, ராமனை காட்டிலும் மாத தவணையில் ரூ. 2263 ஐ குறைவாக ரவி செலுத்துகிறார். தவணை காலத்தை கவனத்தில் கொண்டிருப்பதும் அவசியம். சொல்லப்பட்ட ரூ. 2263 இடைவெளி தொகையை ரவி ஒரு பரஸ்பர நிதி திட்டத்தில்(SIP – Equity Mutual Funds) மாத முதலீடாக செலுத்துகிறார் என கொள்வோம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இருவரும் தங்களது மாத தவணையை செலுத்தி வரும் நிலையில், 17 வருட முடிவின் போது ராமன் கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 47,87,222 (23,467 X 17 வருடங்கள் அல்லது 204 மாதங்கள்) ஆக இருக்கும். அதே காலத்தில் ரவி கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 43,25,616 (21,204 X 204 மாதங்கள்).
நாம் சொன்ன ரவியின் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை 17 வருட முடிவில், 4,61,606 ரூபாயாக இருக்கும். ரவியின் 17 வருட முடிவின் தவணை தொகை மற்றும் முதலீட்டு தொகையை சேர்த்தால்(SIP Corpus), ரூ. 47,87,222 ஆக இருக்கும். ராமனுக்கு தவணை செலுத்த கூடிய காலம் இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. அதே போல ரவிக்கு அது 13 வருடங்களாகும்.
இந்த சமயத்தில் ரவியின் மாத முதலீடான 2263 ரூபாய், 15 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் 17 வருட முடிவில் 21,27,253 ரூபாயாக இருக்கும். ராமன் அடுத்த 13 வருடங்களில் செலுத்த வேண்டிய அசல் தொகை 18,85,811 ரூபாய். இதனை தனது பரஸ்பர நிதி முதலீடு திட்டத்தில் உள்ள பணத்தை கொண்டு 17 வருட முடிவில் அடைத்தால், அவருக்கு மீதமிருக்கும் தொகை ரூ. 2.41 லட்சம். இதன் மூலம் ரவி தனது கடனையும் அடைத்து விட்டு, பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் சிறிய தொகையையும் (ரூ. 2.41 லட்சம்) மீதம் பெற்றுள்ளார்.
மறுபுறத்தில், ராமன் அடுத்த 3 வருடங்களில் அடைக்க வேண்டிய அசல் தொகை ரூ. 7,31,514. ராமன் தனது வீட்டுக்கடனை 20 வருடங்கள் கட்டி முடிக்க வேண்டிய சூழ்நிலையில், ரவி சாமர்த்தியமாக ஒரு முதலீடு திட்டத்தின் மூலம் 17 வருடங்களில் தனது கடனை அடைத்து விட்டார். ராமனை விட ரவிக்கு கிடைத்த மொத்த சலுகையின் மதிப்பு 10.86 லட்சம் ரூபாய் ( பரஸ்பர நிதி முதலீட்டின் எஞ்சிய தொகை மற்றும் அடுத்த 3 வருடங்களில் செலுத்த வேண்டிய தவணை தொகை).
ராமனும், ரவியை போன்று சாமர்த்தியமாக செயல்பட வேண்டுமென்றால் கூடுதலாக ஒரு முதலீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் வீட்டுக்கடனுக்கான வட்டி(Bank Interest Rate) விகிதம் குறைவாக இருப்பதும், முதலீட்டின் மூலம் பெறக்கூடிய வருவாய் (SIP Returns) அதிகமாக அமைவதும் தான் வாய்ப்பாக கருதப்படும். முதலீடு செய்யும் ஒருவர் பணவீக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பரஸ்பர நிதி திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் 15 சதவீத வருவாயை ஏற்படுத்த முடியாது. நீண்ட காலத்தில் ஒருவர் முதலீடு செய்யும் பட்சத்தில், நல்ல வட்டி வருவாயை ஈட்டலாம். வீட்டுக்கடனை அடைக்கும் போது, முதலீடு செய்கிறேன் என ஒருவர் வட்டி குறைவான முதலீட்டு சாதனத்தை எடுத்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட முடியாது.
நாம் பெறக்கூடிய முதலீட்டின் மீதான வருவாய்(Return on Investment), வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த திட்ட முறை செயல்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு ஒருவர் தனது கடனை அடைப்பதில் திட்டமிடலாம்.
(கணக்கீடு தரவுகள்: எச்.டி.எப்.சி.(HDFC MF) மியூச்சுவல் பண்டு பயன்பாடு)
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
If we continously doing sip the nav also become average only then how it will give returns? If we done one time huge investment during market down period then we will have some returns? Explain plz
LikeLike
நீண்ட காலத்தில் ஒருவர் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், சந்தை ஏற்ற-இறக்கங்களை சரிக்கட்டி அவரால் நல்ல வருவாயை பெற முடியும். இங்கே NAV(Net Asset Value) என்பது முக்கியமல்ல, தொடர் முதலீடு மட்டுமே. இந்த NAV விகிதம் அதிகமானாலும், குறைந்தாலும் நீண்ட காலத்தில் ஒருவருக்கு பயனை(Rupee Cost Averaging) தான் கொடுக்கும்.
ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட தொகையை(Lump sum Investment) முதலீடு செய்து விட்டு, பெரிய வருவாயை பெறுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவே. . சந்தையில் இது தான் இறக்க (கரடி சந்தை) காலம் என யாராலும் சரியான கணிக்க முடியாது. அப்படியிருக்கையில் தொடர் முதலீட்டை மேற்கொள்வது நலம்.
நன்றி, வர்த்தக மதுரை
LikeLike
கடனை அடைக்க நல்ல தீர்வு. நன்றி 🙏
LikeLike