பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான சேமிப்பை உருவாக்குவது எப்படி ?
How to Create Birthday Party Fund ?
குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடுவது ஒவ்வொரு பெற்றோருக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சியாக இருக்கும். இன்றளவில் பிறந்த நாள் கொண்டாட்டமும், குடும்பத்தின் ஒரு விழாவாக அமைந்து விட்டது என்றால் மறுப்பதற்கில்லை. அதே வேளையில் கொண்டாடுகிறேன் என்ற பேரில் அதிக செலவை கொண்டிருந்தாலும், பின்னாளில் அது நமது குடும்ப பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நம்மில் சில பெற்றோர்களுக்கு வேறு எதையும் விட, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக முக்கியமானதாக பார்க்க முடிகிறது. பிறந்த நாள் விழாவிற்கான பட்ஜெட்டை நாம் முன்னரே திட்டமிட்டு செய்வதனால், நமக்கு நிதி சார்ந்த திருப்தியும் ஏற்படும்.
வாருங்கள், நமது குழந்தைகளுக்கான பிறந்த நாள் நிதியை(Birthday Party Fund) உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிதியை உருவாக்க சரியாக ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடுவது இலக்கை வெற்றியடைய செய்யும். உங்களது மழலையின் முதல் பிறந்த நாள் எனில், அவர்களின் முதல் மாதத்திலே திட்டமிடுவது நலம். மற்ற வயது குழந்தைகளுக்கு, அவர்களின் முன் வருட பிறந்த நாள் விழா அன்றே முடிவு செய்வது சிறந்தது.
உதாரணத்திற்கு, சங்கத்தமிழ் என்ற மழலைக்கு இரண்டாவது பிறந்த நாள் விழாவை கொண்டாட அவர்களது பெற்றோருக்கு திட்டமிடலை கொடுப்போம். சங்கத்தமிழுக்கு இப்போது தான் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து ஒரு வாரமாகிறது.
2வது பிறந்த நாள் பட்ஜெட் : ரூ. 15,000 /-
காலம்: ஒரு வருடம்
நமக்கு இன்னும் ஒரு வருட காலம் இருப்பதால், மாதம் ரூ. 1200/- வீதம் அஞ்சலக சேமிப்பு(Postal Savings) அல்லது வங்கி சேமிப்பில் அடுத்த ஒரு வருடத்திற்கு சேமித்து வாருங்கள். ஒரு வருட முதிர்வில் 7 சதவீத வட்டி விகிதம் என கொண்டால், கிடைக்கக்கூடிய முதிர்வு தொகை ரூ. 15,000/- ஆகும்.
இவ்வாறாக நமது சேமிப்பை திட்டமிட்டு பிறந்த நாள் விழாவிற்கான நிதியை தயார் செய்யலாம். இது போன்று தங்களுக்கு தேவையான நிதி இலக்கை நிர்ணயித்த பின்னர், மாதாமாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு, திடமாக சேமித்து வாருங்கள், உங்களுக்கான நிதி இலக்கு தொகை எந்த சிரமமும் இல்லாமல் கிடைக்கப்பெறும். பிறந்த நாள் மாதத்தில் மாத பட்ஜெட்டுக்கும் சிக்கல் வராது.
இந்த பிறந்த நாள் விழாவிற்கான நிதியை நீங்கள் மற்றொரு முறை மூலமும் திட்டமிடலாம். உங்கள் குழந்தையிடம் தினமும் 5 ரூபாயை கொடுத்து ஒரு உண்டியலில் போட்டு வர சொன்னால், மாத முடிவில் கிடைப்பது ரூ. 150/- இதனை ஒரு வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கில் முதலீடு செய்து வந்தால், ஒரு வருட முடிவில் 7 சதவீத வட்டியில், முதிர்வு தொகையாக 1870 ரூபாய் கிடைக்கும்.
மேலே சொன்ன ரூ. 15,000/- திட்டமிடலுக்கு தினமும் உங்கள் குழந்தையிடம் 40 ரூபாயை கொடுத்து உண்டியலில் போட்டு வர சொன்னால், மாத முடிவில் ரூ. 1200/- கிடைக்கப்பெறும். பொதுவாக குறுகிய கால ( 6 மாதம் – 3 வருடம்) திட்டமிடலுக்கு வங்கி (RD), அஞ்சலக சேமிப்பு அல்லது பரஸ்பர நிதி வழங்கும் லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) முதலீடு செய்து வாருங்கள். குறுகிய கால இலக்கிற்கு ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
நாம் சொன்ன நிதி திட்டமிடல் பிறந்த நாள் விழாவிற்கு மட்டுமல்ல. இதனை போல பண்டிகை காலங்கள், பரிசளிப்பது, சுற்றுலா போன்றவற்றிற்கும் திட்டமிடலாம். உங்கள் குழந்தை நன்றாக படித்தால், அவர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பது என்பது அவர்களையும் ஊக்குவிக்கும், உங்களையும் நிதி சார்ந்த விஷயத்தில் திட்டமிடலை உருவாக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை