நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் – பிட்ச் குழுமம்
Fitch Group India Ratings cut GDP growth to 6.7 Percent for FY20
உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் நிதி தகவல் சேவையை அளித்து வரும் பிட்ச் குழுமத்தின்(Fitch Group) துணை நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தனது பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளிவிவரங்களை கூறும் போது, நடப்பு 2019-20ம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக காணப்படும் என சொல்லியிருந்தது.
இதற்கு முன்பு 2019-20ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.3 சதவீதமாக சொல்லப்பட்டிருந்தது. தற்போது இந்த வளர்ச்சியை குறைத்து கூறியுள்ளது பிட்ச் குழும இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சமீபத்தில் மத்திய அரசால் சொல்லப்பட்ட நிதி சார்ந்த மாற்றங்கள் சாதகமாக இருப்பினும், நடப்பு வருடத்தில் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உடனடியாக வளர்ச்சியை பெறுவது சாத்தியமில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் கூறுகையில், ‘மத்திய அரசு பொது மக்களிடம் பொருளாதார மாற்றம் சார்ந்த நம்பிக்கையை உருவாக்க தவறி விட்டது ‘ என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா ரேட்டிங்ஸ்(India Ratings) நிறுவனம் கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்துள்ளது. வீட்டு சேமிப்பும்(Household Savings) வெகுவாக குறைந்துள்ளதாக கூறியுள்ள இந்நிறுவனம், கடந்த 2012ம் வருடம் 23 சதவீத சேமிப்பு வளர்ச்சி என்ற நிலையிலிருந்து 2018ம் வருடம் 17 சதவீத சேமிப்பு மட்டுமே என்ற மாற்றத்தை பெற்றுள்ளன.
நகர்ப்புற சேமிப்பும், முதலீடும் சாதகமாக இல்லை எனவும், கிராமப்புறங்களில் தனியார் நுகர்வும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தனியார் துறையில் சேமிப்பு வளர்ச்சி அதிகரித்தும், அவை தற்போது உள்ள சூழ்நிலையில் முதலீடு செய்ய தயங்குகின்றன.
உலக பொருளாதார காரணிகளும் தொய்வு நிலையில் இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய அளவு மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை