டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்தின் ஒன்பது முதலீட்டு பொன்விதிகள்
DSIJ’s Nine Golden Rules for Stock Investing
புனே நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான் டி.எஸ்.ஐ.ஜே (Dalal Street Investment Journal). 1986ம் ஆண்டு நிதி சார்ந்த பத்திரிகையை தொடங்கிய இந்நிறுவனம் இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் நேற்று (28-07-2019) மதுரை ஜே.சி. ரெசிடென்ஸி (JC Residency) விடுதியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்துடன் சுந்தரம் பரஸ்பர நிதி(Sundaram Mutual Fund) நிறுவனமும் கூட்டமைத்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டது. நிகழ்வில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான பல விஷயங்கள் எடுத்து சொல்லப்பட்டது. பங்குச்சந்தைக்கு புதிதாக வருகை தரும் முதலீட்டாளர்கள் எவ்வாறான முன்னெச்சரிக்கைகளை கையாள வேண்டும் என சொல்லப்பட்டது.
மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் தற்போது காணப்படும் வாய்ப்புகள் மற்றும் அதனை சார்ந்த பங்கு மதிப்பீட்டு விஷயங்களும் அலசப்பட்டது. தனிநபர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பங்குகளை சார்ந்து இருக்காமல், போர்ட்போலியோ முதலீட்டு முறையை(Portfolio Investment) பின்பற்ற வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட பங்குகளில் ஏற்படும் எதிர்பாராத இழப்பை சரி செய்து கொள்ளலாம்.
பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக சரிவை கொண்டிருந்தால், அந்த பங்கினை நீக்கி விட்டு நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுக்க(Restructuring Portfolio) தயக்கம் காட்ட கூடாது. இளம் வயதில் பங்கு முதலீட்டை மேற்கொள்ளும் போது, நீண்ட காலத்தில் மூலதன ஆதாயத்தை பெறுவது மட்டுமில்லாமல் அடுத்த சந்ததியினருக்கு ஒரு முதலீட்டு சொத்தினை வழங்கலாம்.
நிகழ்வின் முக்கிய பகுதியாக வெற்றிகரமான பங்கு முதலீட்டிற்கான ஒன்பது பொன்விதிகளும்(Golden Rules) சொல்லப்பட்டது. அவை பின்வருமாறு,
- உங்களால் முடிந்த முதலீட்டு ரிஸ்க்கை மட்டும் பின்பற்றவும்(Risk Profiling)
- முதலீட்டு காலத்தை முடிவு செய்தல் (Choose Investment Horizon)
- ஏற்கனவே நீங்கள் கொண்டிருக்கும் பங்கு முதலீட்டை மறு ஆய்வு செய்தல் (Restructuring existing Portfolio)
- பங்குச்சந்தை இறக்கத்தில் வாய்ப்புகளை கண்டறிதல்
- ஒரே துறையில்(Sector) 20 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்யக்கூடாது
- ஒரே நிறுவனத்தில் 15 சதவீதத்திற்கு மேல் முதலீட்டை மேற்கொள்ளக்கூடாது (Limit company exposure to 15 %)
- சரியான நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்தல்(Right Stock / Financial Advisor)
- தினசரி வர்த்தகத்தில் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது
- ஒருபோதும் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம் (Never borrow & Invest).
மேற்சொன்ன பொன்விதிகள் பங்கு முதலீட்டில் உள்ளவர்கள் அறிந்திருந்தாலும், இந்த எளிய விதிகளை பின்பற்றும் போது, நமக்கான போர்ட்போலியோ முதலீட்டு சேவை சிறந்ததாக அமையும்.
பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை அடையாளம் காண்பதும், தொழில் வருவாய் இல்லாத நிறுவன பங்குகளை களைவது தான் அவசியம். பங்குகளை எந்த விலையில் விற்கலாம் என்பது முக்கியமல்ல.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை