சிக்கலில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் – 98,000 கோடி ரூபாய் முறைகேடு புகார்
Indiabulls Housing Finance in Trouble – Complaint of Rs. 98K Crore Scam
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வீட்டு நிதி நிறுவனமாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்(IHFL) உள்ளது. தேசிய வீட்டு வசதி வங்கியின்(NHB) கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த நிறுவனம் வீட்டு கடனுக்கான சேவையை வழங்கி வருகிறது. குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானங்களுக்கு கடன் அளிக்கும் வசதியையும் செய்து வருகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம், இந்தியா புல்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,300 கோடி ரூபாயாகவும், நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு 21 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளில் 13 சதவீதம் என்ற அளவிற்கு பங்குகளை அடமானம் வைத்துள்ளனர்.
தற்போது இந்த நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் ஒரு மோசடி புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சமீர் மற்றும் இயக்குனர்கள் பொது மக்களின் பணத்தை மோசடி செய்து விட்டார்கள் எனவும், இதன் மதிப்பு சுமார் 98,000 கோடி ரூபாய் எனவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை பெற்ற இந்தியாவை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் துணையுடன், நிறுவனத்தின் தலைவர் பல போலி நிறுவனங்களை (Shell Companies) உருவாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதலீடாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு கடன் தொகையும் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புகாரை இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் பெயரை களங்கப்படுத்தவும், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை அச்சுறுத்தவும்(Blackmailing) தான் இது போன்ற பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கின் முக்கியத்துவமாக, ‘ நிறுவனத்தின் தலைவர் அரசியல் பின்புலம் உள்ளவர் என்றும், அரசு பணியாளர்கள் மற்றும் தர மதிப்பீட்டு(Rating Agencies) நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மோசடி(Scam) நடைபெற்றிருக்காது. வருமான வரித்துறை(Income Tax Department), செபி மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இது சார்ந்து நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டும் ‘ எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உலகளவில் பொருளாதார மந்தநிலை இருக்கும் சூழலில், இந்தியாவில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்னை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளன என்றே சொல்லலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை