பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India
Equity profits of Rs. 25,000 Crore by LIC India
கடந்த டிசம்பர் 2017 மாத இறுதி புள்ளிவிவரப்படி, LIC India (Life Insurance Corporation of India) ன் பங்கு சார்ந்த சொத்து மதிப்பு ரூ. 5 லட்சம் கோடியாகும். இவை பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் அடங்கிய சொத்துக்களாகும். எல்.ஐ.சி. நிறுவனம் கடந்த 2017-18 ம் நிதியாண்டில் பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் ரூ. 25,000 கோடியை லாபமாக பதிவு செய்துள்ளது.
2015-16 ம் நிதி காலத்தில் பங்குகள் மூலம் ரூ. 11,000 கோடியை லாபமாக எல்.ஐ.சி நிறுவனம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-17 ம் நிதி ஆண்டில் ரூ. 19,000 கோடியை லாபமாக பங்குகள் மூலம் பெற்றது. இதனை ஒப்பிடுகையில் அதன் பங்கு மூலமான லாபம் ரூ. 19,000 கோடியிலிருந்து ரூ. 25,000 கோடியாக அதிகரித்துள்ளது(Equity Trading Profit).
LIC India நிறுவனம் 2017-18 ம் நிதியாண்டில் பங்கு சந்தையில் மட்டும் ரூ. 80,000 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு முதன்மை சந்தையில் முதலீடு மற்றும் அரசாங்க நிறுவனத்தில் முதலீடு போன்றவையாக இல்லை. முதன்மை சந்தை மற்றும் அரசாங்க பங்கு விலக்கல் போன்ற முதலீடுகளை எடுத்து கொண்டால் அவற்றில் சுமார் 60,000 கோடியை தனியாக முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த சில காலங்களாக பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்து வந்ததால், LIC நிறுவனத்துக்கு விற்பனைக்கான வாய்ப்பும், அதிக லாபமும் பெற முடிந்தது. கடந்த 2017 நிதி வருடத்தின் படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு 11 % லாபத்தை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த வருடத்தின் ஜனவரி – மார்ச் (இறுதி காலாண்டு 2017-18) காலத்தில் சென்செக்ஸ் 3 % சரிவை கண்டுள்ளது.
LIC India க்கு கிடைத்த லாபம், அந்த நிறுவனத்தில் பங்கு சார்ந்த காப்பீடு பெறும் முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாகும். இருப்பினும் காப்பீடு பெற்றுள்ளோருக்கு இது போனஸ் தொகையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
எல்.ஐ.சி. பெறும் முதல் வருட காப்பீட்டாளரின் தொகை மட்டும் ரூ. 45,000 கோடியாகும். இந்த தொகை அதன் ஆண்டு வளர்ச்சியில் 15 % என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை