2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் – ஆசிய வளர்ச்சி வங்கி
India GDP growth at 7.3 % for FY 2018-19 – Asian Development Bank
பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2018-19 ம் நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இதனிடையே ஆசிய வளர்ச்சி வங்கி இன்று தனது வெளியீட்டில் கூறியதாவது, நடப்பு 2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் GDP என்று சொல்லக்கூடிய பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் என கணித்துள்ளது.
2019-20 ம் நிதி ஆண்டில் இதன் தொடர்ச்சியாக 7.6 சதவீதமாகவும், அதற்கு அடுத்த வருடத்தில் 7.8 % ஆக இருக்கும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது. பணமதிப்பிழப்புக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த பொருளாதார வளர்ச்சி விகித எதிர்பார்ப்பாக உள்ளது என சொல்லப்பட்டுள்ளது.
GST(Goods and Service Tax) உற்பத்தி அதிகரிப்பு, வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு மறுசீரமைப்பு போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பணமதிப்பிழப்புக்கு பின், கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 % ஆக இருந்தது. புதிய வரி விகித மாற்றங்களும் வருங்கால வளர்ச்சிக்கு துணைபுரியும்.
பொதுவாக சொல்லப்பட்ட வளர்ச்சியானது, கிராமப்புற நுகர்வு, நிதி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் எளிமையான கொள்கை, ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணைபுரியும் விதத்தில் இருக்கும்.
அதே சமயத்தில் நகர்ப்புற நுகர்வும் மேம்படும் மற்றும் உள்கட்டமைப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்றவை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை