World Savings Day | Save Tax – Make Money

 

உலக சேமிப்பு தினம் – World Savings Day – October 31 

 

எளிய முறையில் சேமியுங்கள்… வரிச்சலுகையை பெறுங்கள்… செல்வத்தினை பெருக்குங்கள்…

(World Savings Day – October 31) உலக சேமிப்பு தினத்தையொட்டி ஒரு எளிய முறையில் சேமிக்க மற்றும் வரிச்சலுகையை பெற…

 

சேமிப்பு மற்றும் முதலீடு என்பது நம் எல்லோர் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நாட்டின் வளர்ச்சியானது பெரும்பாலும் பொருளாதாரத்தினை சார்ந்தே இருக்கிறது. அதை போல, நமது தனி நபர் மற்றும் குடும்பத்தின்  பொருளாதார வளர்ச்சி, நமது சேமிப்பு மற்றும் முதலீட்டை சார்ந்தே உள்ளது.  நமது வருமானம் பெரும்பாலும் அரசுக்கு செலுத்தும் வரியாகவே செலவு செய்யப்படுகிறது. நாம் நமது சேமிப்பின் மூலம், நேர்மையான முறையில் அரசுக்கு வரி செலுத்துவதும் மற்றும் நமது பணத்தினை பெருக்குவது எப்படி என்பதை சில எளிய திட்டத்தின் மூலம் பார்ப்போம்.

 

 

1. PPF (Public Provident Fund) பொது வருங்கால வைப்பு நிதி:

 

நாம் ஏற்கனவே நமது இணைய பக்கத்தில்  PPF ல் முதலீடு செய்வது பற்றி விவரித்திருந்தோம்.

( How to invest in PPF  )

  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 Onwards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.7 %
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)

 

ELSS (Equity Linked Savings Scheme) இ.எல்.எஸ்.எஸ் :

 

  • இது பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு திறந்த-முனைய திட்டம்.
  • இதன் மூலம் நாம் வரிச்சலுகை (Section 80C of Income Tax Act) பெறமுடியும் மற்றும் நம் முதலீட்டின் மீதான வருமானத்தையும், வங்கிகளை காட்டிலும் சற்று அதிகமாக பெற முடியும்.
  • குறைந்த பட்ச முதலீடாக சில நிறுவனங்கள் 500 ரூ. முதல் அனுமதிகின்றன.
  • குறைந்த பட்ச Lock-in-period – 3 வருடங்கள்.

 

 

RGESS (Rajiv Gandhi Equity Savings Scheme):

 

  • 2012-13 ம் ஆண்டின் பட்ஜெட்டில், அன்றைய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம்.
  • இத்திட்டம் முதல் முறை முதலீடாளர்களுக்காக உருவாக்கப்பட்டது.
  • ஏற்கனவே மற்ற வரிச்சலுகை திட்டத்தில் ரூ.1,50,000 வரை சலுகை பெற்றவர்கள், இந்த திட்டத்தில் மேலும் ரூ. 50,000 /- அதிகபட்ச முதலீடாக (முதல் முறை முதலீட்டாளருக்கு மட்டும்) மேற்கொள்ளலாம்.

 

அனைவருக்கும் உலக சேமிப்பு தின நல்வாழ்த்துக்கள்…

முதலீடும் திருவினையாக்கும்… !!

நன்றி – வர்த்தக மதுரை 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.