பங்கு சந்தை பகுப்பாய்வு 3.0 – Operating Profit Margin (Sales)
Operating Profit: இயக்க லாபம் (விற்பனை)
Operating Profit என்பது வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருமானம் (Earnings before interest and tax – EBIT).
Operating Profit Margin: இயக்க லாப விகிதம்
Operating Profit Margin(OPM) என்பது விற்பனைக்கும், லாபத்திற்கும் உள்ள விகிதம்.
OPM = EBIT / Sales (or) Operating Profit / Net Sales
உதாரணம்:
SKYTECH நிறுவனத்தின் 2012-13 ஆண்டுக்கான விற்பனை லாபம் 18,50,000 / – மற்றும் மொத்த விற்பனை 80,00,000 / – ரூபாய் என கொள்வோம்.
OPM = 18,50,000 / 80,00,000 = 0.2313 x 100 = 23.13 %
நினைவில் கொள்க:
- இயக்க லாப விகிதத்தை, நாம் காலாண்டு (அ) வருட அடிப்படையிலோ கணக்கிடலாம்.
- இயக்க(விற்பனை) லாபம், அந்த நிறுவனத்தின் நிகர லாபத்திலிருந்து எவ்வளவு வேறுபடுகிறது என்பதையும் கணிக்கலாம்.
- ஒரு நிறுவனத்தின் நிகர லாபம், பெரும்பான்மையாக விற்பனையிலிருந்து வந்திருந்தால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை