பிளிப்கார்ட் இனி வால்மார்ட் – 2000 கோடி டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம்
Flipkart to sell nearly 75 Percent of its stake to Walmart
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதலிடத்தில் உள்ள ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் தனது 75 சதவீத பங்குகளை அமெரிக்காவின் பன்னாட்டு சில்லரை நிறுவனமான வால்மார்ட்டுக்கு விற்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இது சம்மந்தமான தனது சந்திப்பில் இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வால்மார்ட் நிறுவனத்துடன், கூகுள் ஆல்பபெட் நிறுவனமும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் அமேசான் நிறுவனமும் இருந்தது. அமேசான் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவன பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2000 கோடி அமெரிக்க டாலராகும். இவற்றில் சுமார் 1500 கோடி டாலர் மதிப்பிலான 75 % பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஜப்பானை சேர்ந்த சாப்ட்பாங்க் (Softbank) நிறுவனமும், சீன நிறுவனமான டென்செண்டும் (Tencent) முதலீடு செய்துள்ளது. இது போக நாஸ்பெர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. பிளிப்கார்ட் – வால்மார்ட் ஒப்பந்த முடிவில், ஜப்பானை சேர்ந்த சாப்ட்பாங்க் நிறுவனம் தனது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு வெளியேற இருக்கிறது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2007 ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவின் தலைவராக சச்சின் பன்சால் உள்ளார். இவருடன் மற்றொரு நிறுவனராக பின்னி பன்சால் இருந்தார். பிளிப்கார்ட் விற்பனை தருணத்தில், இணை நிறுவனர் சச்சின் பன்சால் தன்னிடமுள்ள 5.5 % பங்குகளை விற்று விட்டு நிறுவனத்திலிருந்து வெளியேறும் முடிவில் உள்ளார்.
வால்மார்ட் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமாகும். இது ஒரு பன்னாட்டு நிறுவனமும் கூட, இதன் வருவாய் 48,600 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமானதாகும். பிளிப்கார்ட் விற்பனைக்கு பிறகு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிறுவனர் பின்னி பன்சால் வால்மார்ட்டிலும் தொடர்ந்து இருப்பார்கள் என தெரிகிறது.
பிளிப்கார்ட் இனி வால்மார்ட் என்ற பெயரில்… !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை