மோசமான காலாண்டு முடிவுகளை கொடுத்த திவான் ஹவுசிங் – ரூ. 6,705 கோடி நஷ்டம்
DHFL reported Poor Quarterly Results – Q2FY20 – Loss of Rs. 6,705 Crore
இந்திய நிதித்துறையில் கடந்த சில வருடங்களாக பாதகமான சூழல் நிலவி வருகிறது. வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் வாராக்கடன் சார்ந்த பிரச்னைகள், முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் வட்டியை செலுத்த முடியாமை அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டில் பொருளாதாரத்தை ஆட்டம் கண்ட வைத்த முதல் நிறுவனம் ஐ.எல்.எப்.எஸ்(IL&FS). இதனை தொடர்ந்து திவான் ஹவுசிங் பைனான்ஸ், அல்டிக்கோ(Altico) என நிறுவனங்களின் பிரச்னைகள் அடுத்தடுத்து செய்திகளாக வந்தன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வாங்கிய கடன் மற்றும் பத்திரங்களுக்கான வட்டியை செலுத்த முடியாமல் திவான் ஹவுசிங்(Dewan Housing – DHFL) நிறுவனம் திணறி வந்தது. திவான் ஹவுசிங் பைனான்ஸ் சந்தை மதிப்பு ரூ. 505 கோடி. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கின் விலை 230 ரூபாயாக இருந்தது. தற்போது பங்கு ஒன்றுக்கு 16 ரூபாய் விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வருட காலத்தில் இதன் பங்கு விலை 92 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மூன்று வருட காலத்தில் 61 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 42 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இருப்புநிலை அறிக்கையில் மார்ச் 2019 முடிவில் ரூ. 7,788 கோடியாக இருந்த கையிருப்பு, செப்டம்பர் 2019 முடிவில் ரூ. 765 கோடியாக உள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவுகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், திவான் ஹவுசிங் தனது இரண்டாம் காலாண்டு முடிவான செப்டம்பர் 2019 காலத்திற்கான நிதி அறிக்கையை வெளியிட்டது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,107 கோடி என சொல்லப்பட்டது. செப்டம்பர் 2019 காலாண்டு முடிவில் நிறுவனம் ரூ. 6,705 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 12,884 கோடி மற்றும் நிகர நஷ்டம் ரூ. 1,036 கோடி. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 75.65 ஆக உள்ளது. கடன் சுமார் 82,000 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனர்கள் தங்களது பங்குகள் முழுவதையும் அடமானம் வைத்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்த பங்கில் தற்போது ஏதும் காணப்படவில்லை.
திவான் ஹவுசிங் பங்கு குறைவான விலையில் வர்த்தகமாகிறது என வாங்கி விட்டு, உங்கள் கையை சுட்டு கொள்ள வேண்டாம். இதனை தான் பெரும்பாலோர் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் செய்தனர். பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றுவது, முதலீட்டாளர்களுக்கு அவசியமான ஒன்று.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை