ஈரானுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அறிக்கை 2020
Indians can travel to Iran without Visa – Most Powerful Passport 2020 – Henley Index
ஹென்லி & பார்ட்னர்ஸ்(Henley & Partners) நிறுவனம் 2020ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடுகளின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு, அந்த குடிமக்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் அனுமதியை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் ஜப்பான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்ப்போர்ட்டுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை கொண்டிருப்பதற்கு காரணம், அந்த நாட்டின் பாஸ்போர்ட்டை கொண்டு, 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இரண்டாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் நாட்டு மக்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதி உண்டு.
இந்தியாவிற்கு இம்முறை 84வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2019ம் வருடத்தில் இந்தியா 82வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு, 58 நாடுகளுக்கு விசா பெறாமல் செல்லலாம். இருப்பினும், சில நாடுகளில் அங்கே தங்குவதற்கு, அந்த நாட்டினை விமானம் மூலம் அடைந்தவுடன் விசா பெறும் வசதியும்(On Arrival Visa) உண்டு.
விசா இல்லாமல் இந்தியர்கள் பூட்டான், கம்போடியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு செல்லலாம். மத்திய கிழக்கு நாடுகளில் அர்மேனியா, ஈரான், ஜோர்டான் மற்றும் கத்தார் நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதி உண்டு. இது போன்று ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும், கரீபியன் பகுதியில் உள்ள சில நாடுகளிலும் இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்.
ஆசியாவில் லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் சீனாவின் மக்காவு போன்ற பகுதிகளுக்கும் விசா இன்றி செல்ல இந்தியர்களுக்கு அனுமதி உண்டு. இந்த பட்டியலில் அமெரிக்கா எட்டாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி மற்றும் தென் கொரியா மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ளன. நான்காம் இடத்தில் பின்லாந்தும், ஐந்தாம் இடத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உள்ளன.
72வது இடத்தில் இருக்கும் சீன பாஸ்போர்ட் மூலம் 71 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். மோசமான பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 26 நாடுகளுக்குள் மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும். இந்த பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் சோமாலியா நான்காம் இடம் பிடித்துள்ளது. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 32 நாடுகளுக்குள் மட்டுமே விசா இன்றி செல்ல முடியும்.
பங்களாதேஷ் மற்றும் இரான் நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 41 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். ஆனால் இராக் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 28 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும். மோசமான பாஸ்போர்ட் பட்டியலில் ஈராக் நாட்டிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை