அஞ்சலக துறையின் புதிய கைபேசி செயலி – இனி ஆன்லைனில் சேமிப்பு மற்றும் முதலீடு
India Post’s New Mobile App – Save & Invest Online !
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் தான் இந்தியா போஸ்ட்(India Post). முன்னர் அஞ்சலக துறை என சொல்லப்பட்ட இந்நிறுவனம் அரசு சார்ந்த வேலைகளுக்கும், பொது மக்களுக்குமான தகவல் தொடர்பு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2012-13ம் நிதியாண்டுக்கு பின்னர் நிதி பற்றாக்குறையில் தள்ளாடியது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின்னர் தகவல் தொடர்பு சேவை என்ற நிலையிலிருந்து நிதி சேவையை அளிக்கும் நிறுவனமாகவும், அஞ்சலக துறை மாற்றப்பட்டது. இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி(India Post Payments Bank) என்ற துணை நிறுவனம் உருவாக்கப்பட்டு, இன்று வங்கி சேவை, காப்பீடு, ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் பாஸ்போர்ட் பதிவு செய்யும் சேவைகளை அளித்து வருகிறது. அதன் பெயரும் அஞ்சலக துறை என்பதிலிருந்து, இந்தியா போஸ்ட் என மாற்றப்பட்டுள்ளது.
பொதுவாக ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பம் என்றில்லாமல் பெரும்பாலான ஓய்வூதியதாரர்களின் நம்பிக்கை நிறுவனமாக அஞ்சலக துறை உள்ளது. சிறு சேமிப்பு என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அஞ்சலக துறையின் சிறு சேமிப்பு திட்டங்கள்(Small Savings Schemes) தான்.
வங்கி சேவை, 50 ரூபாயில் வங்கி சேமிப்பு கணக்கு, ஏ.டி.எம்.(ATM), ரூபே கார்டு என தனது சேவையை விரிவாக்கம் செய்து வந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கான புதிய கைபேசி செயலி(Mobile App) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா போஸ்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டது, ‘ அக்டோபர் 15ம் தேதி முதல் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில், இந்தியா போஸ்ட் வங்கியின் முக்கிய அலுவலகங்களில் மட்டுமே இந்த சேவை கிடைக்கப்பெறும். வங்கியால் சொல்லப்பட்ட அலுவகங்களில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் அவசியம். கிளை அலுவலகங்களில் மற்றும் கிளை அலுவலக வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை தற்போது கிடையாது ‘.
மற்ற வங்கி சேவையை போன்றே, இந்தியா போஸ்ட் வங்கியின் செயலியை பயன்படுத்த கே.ஒய்.சி.(KYC) நடைமுறை, வாடிக்கையாளர் கணக்கு எண், பான் எண், மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண் போன்றவற்றை வங்கியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிய செயலியின்(Postinfo) வாயிலாக ஒருவர் தனது சேமிப்பு கணக்கு, மாதாந்திர வைப்பு தொகை(RD), பொது வருங்கால வைப்பு நிதி(PPF), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), வைப்பு தொகை(Time Deposit) போன்றவற்றில் பண பரிமாற்றம் இணையம் மூலமாக செய்து கொள்ளலாம். இது போன்று புதிய ஆர்.டி.(RD) கணக்கு துவங்குவது, கணக்கு அறிக்கையை அறிய, மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு பண பரிவர்த்தனையை மேற்கொள்வது என ஆன்லைன் மூலமாக செயல்படுத்தலாம்.
செயலி சார்ந்த சேவைகள் மற்றும் புகார்களுக்கு, இந்தியா போஸ்ட் சார்பில் இலவச தொலைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச டோல் எண்: 1800-425-2440 அல்லது மின்னஞ்சல் முகவரி: dopebanking@indiapost.gov.in மேலும் தகவல் அறிய உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை