நாட்டின் பட்ஜெட் தாக்கல் நாளை நடைபெறுகிறது – ஜூலை 5, 2019
Budget India 2019 on July 5, 2019
சுதந்திர இந்தியாவின் 2019ம் ஆண்டுக்கான இரண்டாவது பட்ஜெட் தாக்கல் நாளை (ஜூலை 5) நடைபெற உள்ளது. நடப்பு வருடத்தில் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்(Interim Budget) செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் சொல்லப்பட்டிருந்தாலும், அவற்றிற்கான முழுமையான வடிவத்தை நாளைய பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்க்கலாம்.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, நாடுகளிடையே நிலவும் வர்த்தக போர் மற்றும் எல்லை பதற்றம் ஆகியவற்றை எல்லாம் கடந்து, இந்திய பட்ஜெட் 2019 எவ்வாறு வெற்றி காணப்போகிறது என்பதில் பெரும்பாலான வல்லுனர்களின் கணிப்பு அதிகமாகியுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த இடைக்கால பட்ஜெட்டில் பிரதம மந்திரியின் பென்ஷன் திட்டம், கிசான்(Kisan) திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு ஆதரவு தொகை, வருமான வரி தள்ளுபடிகள்(Tax Rebate) மற்றும் டிஜிட்டல் முறையில் கிராமங்களை இணைக்கும் திட்டம் என பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தது.
நாளை நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கலையும் சேர்த்து, கடந்த மூன்று பட்ஜெட்டிலும் வெவ்வேறான நிதி அமைச்சர்களை நம் நாடு கண்டுள்ளது. திரு. அருண் ஜெட்லீ அவர்களால் அறிவிக்கப்பட்ட பட்ஜெட், கடந்த இடைக்கால பட்ஜெட் 2019ல் பியூஸ் கோயல் அவர்களால் வழங்கப்பட்டது. இம்முறை திருமதி. நிர்மலா சீதாராமன்(Nirmala Seetharaman) நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் தாக்கலில் எந்தவிதமான திட்டங்கள் மற்றும் சலுகைகள் கொண்டுவரப்பட்டாலும், தற்போது இருக்கும் சவாலாக வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரங்கள், நீர் ஆதார பிரச்சனை(Water Crisis), உற்பத்தி துறை வளர்ச்சி, விவசாயிகளுக்கான கொள்கை, வரி மாற்றங்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி நிலைமையை சரி செய்ய அரசு என்ன செய்ய போகிறது என்பதும் நாளை தெரிய வரும். ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் மந்தநிலை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான வரைமுறை, மின் உற்பத்தி மற்றும் வாகன துறையில் மாற்றங்கள் என பல விஷயங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த பட்ஜெட், அதனை பூர்த்தி செய்யுமா ?
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை