ஜூன் மாத வாகனத்துறை விற்பனை – குறைவு
Automobile Sales in India – Down in June 2019
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) உற்பத்தி துறை பெரும்பங்கு புரியாவிட்டாலும், உற்பத்தியில்(Manufacturing) வாகனத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த சில காலாண்டுகளாக வாகனத்துறையில் ஏற்பட்ட சுணக்கமே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வாகனத்துறையின் விற்பனை கணிசமாக குறைந்து வருவது நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. வாடிக்கையாளர்களின் வாங்கும் மனநிலை குறைந்ததால், வாகன விற்பனை குறைவு என சொல்லப்பட்டாலும் ஜி.எஸ்.டி.(GST) வரி விகிதங்கள் மற்றும் சமீபத்திய வாகன காப்பீடு பிரீமியம்(Vehicle Insurance) தான் இதன் விற்பனை வளர்ச்சியை பாதித்துள்ளது எனலாம்.
வாகனத்துறையில் உள்ள முக்கிய பெரு நிறுவனங்கள் வெளிநாட்டு ஏற்றுமதியில் வளர்ச்சியை கண்டிருந்தாலும், உள்நாட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன(Passenger Vehicle) பிரிவில் 16 சதவீதமும், இருசக்கர வாகன பிரிவில் 11 சதவீதமும் விற்பனை குறைவாக உள்ளது.
உள்நாட்டு கார் விற்பனையில் முக்கிய நிறுவனமான மாருதி சுசூகி(Maruti Suzuki Sales) ஜூன் மாத காலத்தில் 17 சதவீத வீழ்ச்சியை கொண்டுள்ளது. இதே போல ஹூண்டாய் நிறுவனம் 7 சதவீதமும், டாட்டா மோட்டார்ஸ் 27 சதவீதமும் மற்றும் இருசக்கர வாகனத்தில் ராயல் என்பீல்ட்(Royal Enfield) 24 சதவீதமும் விற்பனை குறைவை சந்தித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் மட்டும் பயணிகள் வாகன பிரிவில், ஜூன் மாத காலத்தில் 4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. டி.வி.எஸ். மோட்டார்ஸ் 8 சதவீதம் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனம் 19 சதவீத விற்பனை வீழ்ச்சியை கண்டிருந்தது.
நடப்பு வருடத்தில் மழைப்பொழிவு குறைவு என்ற கணிப்பினால் டிராக்டர் விற்பனையும் ஜூன் மாத காலத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த வாரத்தில் நடக்கவுள்ள பட்ஜெட் தாக்கலில்(Budget 2019) விவசாயம் சார்ந்த சலுகைகள் மற்றும் வாகனத்துறைக்கு ஜி.எஸ்.டி. வரி மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனை சார்ந்து தான் இந்திய வாகனத்துறை தற்போது வளர்ச்சியை காணும் நிலையில் உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை