3301 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம்
Reliance Infra has reported a net loss of Rs. 3301 Crore in Q4FY19
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம் உள்கட்டமைப்பு(Infrastructure) துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் மின் பரிமாற்ற சேவைகளை செய்து வருகிறது. 2018-19ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இந்நிறுவனம் 3,301 கோடி ரூபாய் நஷ்டத்தை காண்பித்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதற்கு முந்தைய வருடத்தின்(2017-18) மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 134 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவன வருவாய் 4,013 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.888 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய வருமானம் 1,832 கோடி ரூபாய் நிகர இழப்பாக உள்ளது.
வரிக்கு பிந்தைய வருவாய்(PAT) ரூ. 3,301 கோடி நஷ்டமாகவும், ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனம் 2,427 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்து பத்து நிதியாண்டுகளுக்கும் மேலாக நிறுவனம் இதர வருமானத்தை கொண்டிருந்தாலும், தற்போது முதன்முறையாக 2018-19ம் நிதி வருடத்தில் நஷ்டத்தை அடைந்துள்ளது.
நிறுவனத்தின் விற்பனை கடந்த 10 வருடங்களில் 13 சதவீத வளர்ச்சியையும், லாபம் பத்து வருடங்களில் 10 சதவீத இழப்பையும் கண்டுள்ளது. நிறுவனம் 15,860 கோடி ரூபாயை கடனாக கொண்டுள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்களிப்பில் 98 சதவீத பங்குகளை அடமானம் வைத்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2018-19ம் நிதியாண்டில் இருப்பு நிலை கையிருப்பு(Reserves) 13,913 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில் 23,975 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனில் அம்பானியின் பெரும்பாலான பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடனில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. கடன் தன்மையை குறைக்க, வளர்ச்சியை கொண்டிருந்த மியூச்சுவல் பண்ட் தொழிலிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.
இருப்பினும், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட்(Reliance Mutual Fund) தொழிலில் ஜப்பானை சேர்ந்த நிப்பான் லைப் நிறுவனம்(Nippon Life) கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளன. ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் சராசரி வளர்ச்சியை கொண்டிருக்கின்றன. வரவிருக்கும் நாட்களில் இதன் புதிய நிர்வாக திறமையை ஆராயலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை