Import duty Hike

தயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு

தயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு

India to raise Import tariffs for US Goods – 29 Items in line

 

கடந்த ஜூன் 1ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி.(GSP) சலுகைகளை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து, தற்போது அமெரிக்க நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா தயாராக உள்ளது. ஜி.எஸ்.பி.(Generalized System of Preferences) என்பது ஏழை மற்றும் வளரும் நாடுகள், அமெரிக்க சந்தைக்கு தங்கள் பொருட்களை எவ்வித கட்டணமில்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும். இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரி சலுகைகளை பெறும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சுமார் 29 பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இது நாளை(16-06-2019) முதல் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு இறக்குமதியாகும் உருக்கு(Steel Import) மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு கூடுதல் வரி விதித்திருந்தது.

 

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முனைந்தது. இருப்பினும், இடையே நடைபெற்ற சீன-அமெரிக்க வர்த்தக போர், தேர்தல் அறிவிப்புகள் ஆகியவற்றால் தாமதம் ஏற்பட்டது. நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்க அலுவலகம் இந்தியாவுக்கான ஜி.எஸ்.பி. சலுகைகளை திரும்ப பெற்றதை அடுத்து, தற்போதைய கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு முடிவு ஏற்பட்டுள்ளது.

 

29 வகையான பொருட்களில் ஆப்பிள், பாதாம் பருப்பு, பருப்பு வகைகள், போரிக் அமிலம்(Boric Acid), சுண்டல் ஆகியவை அடங்கும். இதனால் வரும் நாட்களில் இதன் விலையில் மாற்றம் தெரியலாம். கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருக்கு பொருட்களுக்கு 25 சதவீதமும், அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதமும் கூடுதல் வரியை விதித்தது அமெரிக்கா.

 

கூடுதல் வரி விதிக்கப்பட உள்ள 29 வகை பொருட்களின் இறக்குமதி மதிப்பு(Import Cost) (வரிக்கு பிந்தைய) 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், இவற்றில் ஆப்பிள் மற்றும் பாதாம் பொருட்களின் மதிப்பு பெரும்பான்மையாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நடப்பு ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் ஜி 20(G20 Summit) மாநாடு நடைபெற உள்ள நிலையில், தற்போதைய இறக்குமதி சார்ந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே ஏற்படலாம் என தெரிகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.