ஒரு மில்லியன் வாகன விற்பனை சாதனை – டாட்டா மோட்டார்ஸ்
First Indian Company reaches One Million Vehicle Sales Record – Tata Motors
ஜாகுவார் லாண்ட் ரோவர்(JLR) நிறுவனத்தை டாட்டா மோட்டார்ஸ் கையகப்படுத்திய பிறகு, வாகன துறையில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் பல சிக்கல்களில் தவித்தது. சீன வர்த்தக கொள்கை மற்றும் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பிரெக்ஸிட்(Brexit) நிகழ்வு ஆகியவை இந்நிறுவனத்தின் ஜே.எல்.ஆர். பிராண்டை பதம் பார்த்தது. அடுத்தடுத்த வாகன விற்பனை சரிவு, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவில் 26,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இருப்பினும், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை மட்டும் தனியாக பார்க்கும் போது, அதன் வாகன விற்பனை ஒவ்வொரு காலாண்டும் கணிசமான அளவை கொண்டிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் டாட்டா மோட்டார்ஸ் மட்டும் 16,200 கோடி ரூபாய் விற்பனையையும், ஜே.எல்.ஆர்.(Jaquar) நஷ்டத்தை சேர்க்காமல், நிறுவனத்தின் லாபம் 618 கோடி ரூபாயாக உள்ளது. இந்த லாபம் செப்டம்பர் 2018ம் காலத்தை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
கடந்த 2018ம் வருடத்தில் டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors) நிறுவனம் உலகளவில் 10 லட்சம் இலகுரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 10 லட்சம் வாகனங்களை ஒரே வருடத்தில் விற்பனை செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் டாட்டா மோட்டார்ஸ் பெற்றது. இலகுரக வாகன பிரிவில்(Light Vehicle) கார்கள், வேன்கள், சிறிய பயன்பாடுகளுக்கான வாகனம் மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களும் (3.5 டன் வரையிலான) அடங்கும்.
2018ம் வருட காலத்தில் டாட்டா நிறுவனம் மொத்தம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 10.49 லட்சமாகும். இதுவே 2017ம் ஆண்டில் காணும் போது, இந்நிறுவனம் 9.86 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை அளவை கணக்கில் கொள்ளும் போது, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் உலகளவில் உள்ள வாகன துறையில் 16வது இடத்தில் உள்ளது.
நடப்பில் டாட்டா அல்ட்ரோஸ்(Tata Altroz) மற்றும் ஹாரியர்(Harrier) பிராண்டுகள் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை ஹாரியர் வாகனத்திற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளது. வாகன விற்பனையில் வோக்ஸ்வேகன் குழுமம்(Volkswagen Group) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் டொயோட்டா(Toyota) நிறுவனமும், மூன்றாம் இடத்தில ரெனால்ட்-நிசான்(Renault-Nissan) குழுமமும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் ஜெனரல் மோட்டார்ஸ்(GM) நிறுவனம் மற்றும் ஹூண்டாய்-கியா(Hyundai-Kia) குழுமம் அங்கம் வகிக்கிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை