வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 1
Personal Finance – Survey / Polling
வர்த்தக மதுரை சார்பாக வாசகர்கள் சிலர் நிதி கல்வியில் தாங்கள் கற்ற, தெரிந்த, அறியாத விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் படி கேட்டு கொண்டிருந்தனர். ஒரு புறம் மட்டுமே தகவல் வெளிச்செல்ல கூடாது, மறுபுறம் இருந்தும் நமக்கு தகவல்கள் கிடைப்பது அனுபவம் தானே.
எனவே, நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்(Financial Blog in Tamil).
ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
- சேமிப்பு, முதலீடு – இரண்டும் ஒன்றா ?
- அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
- உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?
- முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?
- காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?
குறிப்பு:
நீங்கள் வாக்கு பதிவு தகவல்களை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை