பொருளாதார ஆய்வறிக்கை 2018 – பொது பட்ஜெட்
Economic Survey 2018 for the Budget India
2018-2019 க்கான பொது பட்ஜெட்டை முன்னெடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று (29-01-2018) பொருளாதார ஆய்வறிக்கை 2018 தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் (Ramnath Kovind) அமர்வில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ (Arun Jaitley) பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
2018-2019 பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வரி சம்மந்தமான சலுகைகள் இருக்கலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்ட சில துளிகள் பின்வருமாறு:
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP Growth) வளர்ச்சி 2017-18 ல் 6.75 % ஆகவும், 2018-19 ல் 7 – 7.5 % ஆகவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) 2017-18 ல் 3.2 % எனவும், சில்லறை பணவீக்கம் (2017-18) – 3.3 % எனவும் கூறப்பட்டுள்ளது.
- அன்னிய செலவாணி கையிருப்பு (2017-2018) – 40,900 கோடி அமெரிக்க டாலராகவும் உள்ளது.
- தொழில் துறை வளர்ச்சி விகிதம் 2017-18 ல் 3.2 % ஆகவும், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம்(2017-18) ல் 12.1 % எனவும் தகவல் தரப்பட்டுள்ளது.
- வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 % உயர்ந்துள்ளதாகவும், பண மதிப்பிழப்பு (Demonetisation) நிகழ்வு இதற்கு மிகவும் துணைபுரிந்துள்ளதாக இருக்கிறது.
- கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை மாற்றத்தால், எண்ணெய் (Oil Prices) விலையின் தாக்கம் அதிகம் உள்ளதாகவும், இது முக்கிய பிரச்சனையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணவியல் கொள்கை (Monetary Policy) சீராக இருக்கிறது. ஏற்றுமதிக்கான புதிய கொள்கையால், ஏற்றுமதி துறை வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டு மனை துறையில் புதிய விதிமுறையால் மாற்றம் ஏற்பட்டு, நுகர்வோருக்கு பயனளிக்க கூடிய வகையில் அமையும்.
- தனியார் முதலீடு மீட்டெடுத்தலில் பெரும்பங்காற்ற தயாராக உள்ளது. ஜி.எஸ்.டி (GST) பதிவு அதிகரித்துள்ளதாகவும், தொழிலுக்கு அது சாதகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
- விவசாயம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நடுத்தர காலத்தில் இருப்பதாகவும், அவற்றில் கவனம் செலுத்தப்படுவதாகவும் உள்ளது.
- புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy code -IBC) மெருகேற்றப்பட்டு, பொது துறை வங்கிகளுக்கு சாதமாக உள்ளது மற்றும் பொது துறை வங்கிகளின் வாரா கடனும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயத்துறையில் பெண்களின் பங்கு முக்கியமானதாகவும், விவசாயிகளின் வருமானத்தை வரும் 2025 க்குள் இரட்டிப்பாக்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் தகவலை இங்கே பகிரலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை