Tag Archives: pan mandatory

பான் மற்றும் நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு – ஜூன் 30 ஆக நீட்டிப்பு

பான் மற்றும் நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு – ஜூன் 30 ஆக நீட்டிப்பு

 

Aadhaar linking deadline extended for PAN and Welfare Schemes

 

இந்தியாவில் உள்ள பல்வேறு சேவைகளுக்கு இன்றையளவில் ஆதார் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவைக்குமான ஆதார் இணைப்பு நடைமுறையில் காலதாமதம் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமையால் காலக்கெடு நீட்டிப்பு என்பது தற்சமயத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

பணமதிப்பிழப்புக்கு(Demonetisation) பிறகு அரசு பல்வேறு கட்டங்களாக ஆதார் இணைப்பு நடவடிக்கையை முடுக்கி விடப்பட்டுள்ளது. இருப்பினும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வங்கிக்கணக்குகள் மற்றும் கைபேசி எண்களுக்கான(Bank accounts and Mobile numbers) ஆதார் இணைப்பு காலக்கெடுவை காலவரையற்றதாக அறிவித்தது. இதை போல நேற்றும் அரசு சார்பில் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி பின்வரும் விஷயங்களுக்காக தெரிவிக்கப்பட்டது.

 

நாட்டில் உள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு கடைசி தேதியாக வரும் ஜூன் 30 (June 30,2018) ஆக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 150 நலத்திட்டங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம், ரேஷன், மதிய உணவு உட்பட்ட நலத்திட்டங்களும்(Pension scheme,MGNREGA, PDS) இவற்றில் அடங்கும். இதற்கு முன் நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் 31 ஆக இருந்தது குறிப்படத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இதனை போல, நேரடி வரிக்கான மத்திய ஆணையமும்(Central Board of Direct Taxes – CBDT) பான் – ஆதார் இணைப்பிற்கான (PAN – Aadhaar linking) காலக்கெடுவாக ஜூன் 30 ம் தேதியை அறிவித்தது. பான் (PAN) சம்மந்தமான இணைப்பில் அரசு ஏற்கனவே 4 முறை நீட்டித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

இந்த ஆணையத்தின் புள்ளிவிவரங்களின் படி, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள 33 கோடி பான் கணக்கில், 16 கோடி பான் எண்களுக்கு ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் பான் எண்ணிற்கான ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற நடைமுறை ஜூலை 31, 2017 ம் தேதி முதலும், புதிய பானுக்கான (New PAN) ஆதார் சமர்ப்பிப்பு ஜூலை 1, 2017 முதலும் அமல்படுத்தப்பட்டது.

 

ஆதார் இணைப்பில் உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடி மற்றும் சமீப காலங்களில் ஆதார் குறித்த பாதுகாப்பின்மை போன்ற தகவல்களால், மேலே உள்ள இரு சேவைகளுக்கு அரசு சார்பில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? Where quoting PAN Mandatory ?

 

Where quoting PAN Mandatory ? (From 1st January, 2016)
எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? [2016, ஜனவரி 1 ம் தேதி முதல் ]
1. வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு (Bank Account Opening).
2. வங்கியில் ஒரே பரிமாற்றத்தில்/ஒரு நாளில் ரூ. 50,000/- க்கு மேல் பண வரவு வைக்கும் போது.
3. தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் ஏதேனும் வாங்கும் போது, ஒரே பரிமாற்றத்தில் வாங்கும் மதிப்பு ரூ. 2,00,000 க்கு அதிகமாக இருந்தால்.
4. வாங்கும் சொத்தின் மதிப்பு ரூ. 10,00,000 (லட்சம்) க்கு மேல் இருந்தால்.
5. Hotel/Restaurant ல் செலவு ரொக்கமாக ரூ. 50,000/- க்கு அதிகமாக இருப்பின்.
6. DEMAT கணக்கு தொடங்குவதற்கு.
7. வெளிநாட்டு சுற்றுலா செலவு(Fare,Payment to travel agent)  ரூ. 50,000/- க்கு மேல் இருந்தால் (அ) வெளிநாட்டு நாணயத்தை வாங்கும் மதிப்பு ஒரு பரிமாற்றத்தில் ரூ. 50,000/- க்கு மேல் இருப்பின்.
8. காப்பீட்டுக்கு(Life Insurance) ஒரு வருடத்திற்கு செலுத்தும் பணம் ரூ. 50,000 /- க்கு அதிகமாக இருந்தால், பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம்.

 

மேலும் தகவலுக்கு, கீழே உள்ள Income Tax India ன் அட்டவணையை பாருங்கள்.

PAN-mandatory

 

வாசகர்கள் அனைவருக்கும் 2016 ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Happy New Year 2016  🙂

நலமும், வளமும் பெருகட்டும்..

முதலீடும் திருவினையாக்கும் !
வர்த்தக மதுரை