About me

திரு.சரவணகுமார் நாகராஜ் (கணினியில் இளங்கலை, மேலாண்மையில் முதுகலை பட்டப்படிப்பு)

தகவல் தொழில்நுட்பத் துறையில் தனது துவக்கக் காலப் பணியை செய்த இவர், அது சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் (DHL Logistics, Accel Frontline – Now Inspirisys, Apex Technologies, IIHT – Microsoft Certified Trainer) பணிபுரிந்துள்ளார். பின்னர் ஒன்றிய அரசுப் பணிக்கு மாறிய இவர், ரயில் நிலைய அதிகாரியாகவும்(Station Master), பின்னர் கட்டுப்பாட்டு அறையில் சார்பு ஆய்வாளராகவும் (Traffic Inspector – FOIS) – Indian Railways பொறுப்பு வகித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது முழுநேரப் பணியை துறந்து விட்டு ஒரு முழு நேர தொழில்முனைவோரானார்.

நடுத்தர வருமானக் குடும்பத்திற்கான பண மேலாண்மையில்(Money Management) அவருக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான உரையாடல் அனுபவம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கான தனிநபர் நிதி மேலாண்மை சார்ந்த தேடலுக்கும் வழிவகுத்துள்ளது. இதுவரை அவர் இது சார்ந்த கிட்டத்தட்ட 1500 மாதிரிகளை(Sampling – நண்பர்கள், உறவினர்கள், தொழிலாளர் நட்புகள்) எடுத்து தற்சோதனை செய்துள்ளார். நடுத்தர வர்க்க வருமானத்தில் தனி நபர் நிதித் திட்டமிடல் சார்ந்த சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.

நடப்பில் இவர் ஒரு மதிப்புமிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்(Value Investor) மற்றும் இந்திய பங்குச் சந்தையுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளார்(15 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீடு). தற்போது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகம், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், பங்குத் தரகு(பங்கு முதலீடு), NPS (தேசிய ஓய்வூதிய முறை), அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் மருத்துவ காப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வெறுமென விற்க அவர் விரும்புவதில்லை. பணக் கல்வியின் அவசியம் மற்றும் முதலீட்டின் முக்கியத்துவம் குறித்து தனது வாடிக்கையாளர்களுக்குக் கற்பிப்பதில் அவர் ஆர்வமாக உள்ளார். அதற்காக அவர் வாடிக்கையாளர்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட நிதித் திட்டங்களை பரிந்துரைக்கிறார்.

அடிப்படை கற்றல் மற்றும் நிதி சார்ந்த அக்கறை மூலம் மட்டுமே நல்லதொரு செல்வத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார். உங்களுக்கான நிதி சார்ந்த இலக்குகளை சரியான நேரத்தில் அடையவும், முதலீட்டின் மீதான அபாயத்தை கருத்தில் கொண்டு, சரியான நிதித் திட்டங்களை தேர்வு செய்யவும் அவர் உங்களுக்கு உதவுவார்.

LinkedIn

Facebook

Twitter(X)

We are offering Services on Demat Account, Mutual Fund Distribution, Insurance(Life and Health), Tax Free Bonds, NPS(National Pension System), Real Estate – Property Consulting and Investor Education 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Financial Blog in Tamil