2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ

2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ  

Zomato had a loss of 29.4 Crore Dollar in the 2018-19 Fiscal year

மாதத்திற்கு சராசரியாக 19 கோடி உணவு பயனாளர்களை கொண்டுள்ள உணவு விநியோக சேவை நிறுவனம் ஜோமாடோ(Zomato). 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று தனது சேவையை 24 நாடுகளிலும், 4000க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டிருக்கிறது. சீனாவின் அலிபாபா நிறுவனம் ஜோமாடோவில் 10 சதவீத பங்கு அளவில் முதலீடு செய்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களான உபேர் ஈட்ஸ்(Uber Eats) மற்றும் ஸ்விக்கி(Swiggy) நிறுவனங்களுடன் உணவு விநியோக சேவையில் போட்டிபோட்டு கொண்டு வெற்றிகரமாக வலம் வரும் இந்திய நிறுவனம் தான் ஜோமாடோ. உலகளவில் இதுவரை 12 நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது ஜோமாடோ. உணவகங்களை இணையத்தில் தேடுவது, உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது, நிர்வாகங்களுக்கு தேவையான உணவு சார்ந்த சேவையினை அளித்தல் மற்றும் மற்ற உணவு விற்பனைகளை(Food Delivery Business) செய்து வருகிறது  இந்த நிறுவனம்.

 

நேற்று (05-04-2019) தனது 2018-19ம் நிதியாண்டுக்கான ஆண்டு நிதி அறிக்கையை (Annual Report) வெளியிட்டது, 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக நிறுவனம் சார்பில் .தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் 2018-19ம் நிதியாண்டில் 20.6 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த 2017-18ம் நிதி வருட வருவாயை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாகும். 2017-18ம் நிதியாண்டில் ஜோமாடோ நிறுவனத்தின் வருவாய் 6.8 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

 

இந்திய பிராந்தியத்தில் ஏற்பட்ட செலவின விகிதங்கள் அதிகமானதாகவும், இதன் தொடர்ச்சியாக நிறுவனம் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகள் வரும் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வருவாயை அளிக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உணவு விநியோக சேவையில்(Delivery Service) 15.5 கோடி டாலர்களும், உணவகங்களுடன் சேர்ந்து உணவளிக்கும் வகையில்(Dining out) 4.9 கோடி டாலர்களும், சுகாதாரமான உணவளிக்கும் பிரிவில்(Sustainability) 20 லட்சம் டாலர்களையும் 2018-19ம் நிதி வருடத்தில் வருவாயாக ஈட்டியுள்ளது. ‘Feeding India’ என்ற பெயரில் 8500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு, உணவில்லாதவர்களுக்கு 2 கோடி உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.