நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனம் – ஜிரோதா

நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனம் – ஜிரோதா

Largest Stock Broker in India – Zerodha

 

சுமார் 8.47 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட பங்குச்சந்தை தரகராக தற்போது ஜிரோதா நிறுவனம்(Zerodha) உள்ளது. இதற்கு அடுத்தாற் போல் ஐ.சி.ஐ.சி.ஐ. செக்கியூரிட்டிஸ் (ICICI Securities) நிறுவனம் 8.44 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜிரோதா நிறுவனத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் செயலில் உள்ளவர்கள் (Active Clients) என்பது கவனிக்கத்தக்கது.

 

கடந்த 2010 ம் வருடம் நிதின் காமத் (Nithin Kamath) மற்றும் நிகில் காமத் (Nikhil) ஆகிய இருவரால் துவங்கப்பட்ட பங்குச்சந்தை தரகு நிறுவனம் தான் ஜிரோதா (Zerodha). பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தை உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது எனலாம். பெரிய தரகு நிறுவனங்கள் பிரமாண்டமான அலுவலக கிளைகளை ஏற்படுத்தியும், வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட தரகு கட்டணத்தையும் (Brokerage Charges) வசூலித்து வந்த நிலையில், ஜிரோதா நிறுவனம் இணையம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தரகு கட்டணத்திலும் சலுகையை கொண்டு வந்தது.

 

நாளொன்றுக்கு 20 லட்சம் வர்த்தக பரிவர்த்தனைகளையும், சராசரி தினசரி வர்த்தக மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியும் நடைபெற்று கொண்டிருப்பதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரகு கட்டணத்தில் சலுகை (Discount Broking) காட்டிய இந்நிறுவனம், டெலிவரி(Delivery Shares) என்று சொல்லப்படும், பங்குகளை இன்று வாங்கி மற்றொரு நாளில் விற்கும் பரிவர்தனைகளுக்கு எந்தவொரு தரகு கட்டணத்தையும் பெறுவதில்லை (Zero Brokerage). இது மற்ற தரகு நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
Clients Stock Brokers wise 2018

400 கோடி ரூபாய் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜிரோதா நிறுவனத்தில் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்களும், 8.47 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பல சவால்களை சந்தித்த இந்த நிறுவனம் கடந்த வருடத்தின் சிறந்த தரகு நிறுவனமாகவும் பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து விருதை பெற்றது. இதை விட மற்றொரு சிறப்பம்சம் ஜிரோதா நிறுவனத்திற்கு எந்த கடனும் இல்லை என்பது தான்.

 

தொழிலில் புதுமை, தொழில்நுட்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துதல் மற்றும் கடனில்லாமல் நிறுவனத்தை நடத்துவது போன்ற்வை ஜிரோதா நிறுவனத்தை தற்போது நாட்டின் மிகப்பெரிய தரகு நிறுவனமாக (Largest Stock Broker) மாற்றியுள்ளது. இதற்கு பின்னர் பல சவால்களும், நம்பிக்கைகளும் இருந்ததாக நிறுவனர் நிதின் காமத் கூறியுள்ளார். பல கோடி ரூபாய் முதலீடுகளை செய்து விட்டு, பங்குச்சந்தை தரகு நிறுவனமாக உருவெடுக்கும் ஒரு நிறுவனம் பெரும்பாலும் அதன் வாடிக்கையாளரையே சார்ந்துள்ளது. இதனால் தரகு கட்டணங்களும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.