மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018

மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018

 

Wholesale Price Index (WPI) Inflation eases to 2.48 percent in February 2018

நாட்டின் பிப்ரவரி மாதத்திற்கான  மொத்த விலை பணவீக்கம்(Wholesale Price Index -WPI Inflation)  2.48 % ஆக குறைந்தது. இந்த சதவீதம் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவாகவும் உள்ளது. 2017 ல் இதே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 5.51 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

உணவு பொருட்களின் விலை குறைவால் மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதமாக உள்ளது. காய்கறிகளின் பணவீக்கம் 15.26 % ஆக உள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதத்தில் 40.77 % ஆக இருந்தது. முட்டை, மீன் மற்றும் மாமிசம் போன்றவற்றின் பணவீக்கம் 0.37 சதவீதத்திலிருந்து 0.22 % ஆக குறைந்துள்ளது.

 

எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 3.81 % ஆக அதிகரித்தும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 24.51 % ஆக குறைந்தும் இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம் 3.04 சதவீதமாக உள்ளது.

( Read this post after the advertisement… )

  

 

ஏற்கனவே இந்த வாரம் வெளியிடப்பட்ட சில்லறை பணவீக்கம்(Retail Inflation) 4.44 % ஆக உள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவாகும். பணவீக்க சரிவுக்கு காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை குறைவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் உலக வங்கி(World Bank), நாட்டின் 2019 நிதியாண்டுக்கான(FY19) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை(GDP)  7.3 % ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. அதுவே 2019-20 ல் 7.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. இந்த கணிப்பு பணமதிப்பிழப்பு(Demonetisation) மற்றும் ஜி.எஸ்.டி (GST) தாக்கத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

 

பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சம்மந்தமான தகவல்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office –CSO) அறிவித்து வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த புள்ளி விவரங்களையும் இந்த அலுவலகம் வெளியிட்டு வருகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.