வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படுமா ?

வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படுமா ?

Will the tax rates be reduced for Automotive sector in India ?

 

வாகனத்துறையின் வளர்ச்சி கடந்த சில காலங்களாக தொய்வு நிலையில் காணப்படுகிறது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர் மற்றும் எல்லை பதற்றம் வாகனத்துறையை பாதித்துள்ளது எனலாம்.இருப்பினும், உள்நாட்டில் வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதமும்(GST rates), காப்பீடு ப்ரீமியமும்(Insurance) சாதகமாக இல்லை. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் வாகனத்துறையை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. அதன் விற்பனை ஒவ்வொரு காலாண்டிலும் சரிவடைந்து கொண்டு தான் செல்கிறது.

 

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதமாக உள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு அதற்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க முனைந்தது.

 

நடப்பு வாரத்தில் இது சார்ந்த வரி விகித மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய சக்தி மூலமான மின்சாரம் மற்றும் காற்றாலை(Wind Turbine) திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

வரும் வியாழக்கிழமை (25-07-2019) ஜி.எஸ்.டி. குழு கூட்டம் நடைபெற உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் வரி விகித மாற்றம் இருக்காது எனவும், தற்போதைக்கு அரசு மின்சார வாகனத்திற்கான வரி விகிதங்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் எனவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.