வெனிசுலா நாட்டின் பணவீக்கம் 4,88,865 சதவீதம் – நம்புவீர்களா ?

வெனிசுலா நாட்டின் பணவீக்கம் 4,88,865 சதவீதம் – நம்புவீர்களா ?

Venezuela’s Current inflation is 4.88 Million percent – Do you believe ?

 

நமது நாட்டின் தற்போதைய பணவீக்கம் 3.69 சதவீதம் என்ற அளவில் உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் இன்னும் உயரும் என்ற ஐயப்பாட்டில் அதற்கான நடவடிக்கைகளை பாரத ரிசர்வ் வங்கி  கடந்த சில காலங்களாக எடுத்து வருகிறது.

 

இங்கே தான் பணவீக்கம் (Inflation) இப்படி என்றால், வெனிசுலா நாட்டின் பணவீக்கம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. அந்த நாட்டின் தற்போதைய பணவீக்கம் 4,88,865  சதவீதமாக உள்ளது. 2014 ம் வருடத்தில் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சியால் இந்த நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைந்தது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல், நாட்டில் விலைவாசி ஒவ்வொரு நாளும் வெகுவேகமாக உயர்ந்து வருகிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியம் கணித்த தகவலின் படி, வெனிசுலா நாட்டின் பணவீக்கம் 2019 ம் வருட முடிவில் 10 லட்சம் சதவீதமாக இருக்கும் என அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கூறியுள்ளது. பண விநியோகம் மற்றும் நாணய கட்டுப்பாடுகளின் விரிவாக்கம் போன்றவற்றால் தான் இந்த அளவு பணவீக்கம் உயர்ந்துள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வெனிசுலா நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை போன்றே, 1923 ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிலும், 2000 ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜிம்பாப்வே நாட்டிலும் ஏற்பட்டது. இருப்பினும், வெனிசுலா நாட்டிற்கான பொருளாதார தரவுகள் சரியாக வெளிப்படவில்லை என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் எச்சரித்து இருந்தது. 1973 ம் ஆண்டு வாக்கில் இந்த நாட்டின் பணவீக்கம் 3.22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வெனிசுலா நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டில் (consumer price index -CPI) உணவு மற்றும் குளிர்பானங்களின் (Non-alcholic beverages) கூட்டு அளவு மட்டும் 32 சதவீதமாக உள்ளது. போக்குவரத்து 10 சதவீதமும், உணவகம் மற்றும் விடுதி கணக்கு 9 சதவீதமும், வீடு வாடகை 10 சதவீதமாக உள்ளன. கல்வி 2.7 சதவீதத்தையும், சுகாதாரம் மற்றும் மருத்துவம் 4.3 சதவீதத்தையும் கொண்டுள்ளன. தொலைத்தொடர்பு 3.8 சதவீதமாக மொத்த குறியீட்டில் இருக்கிறது.

 

ஒவ்வொரு நாளும் பணவீக்கம் 4 % என்ற அளவில் உயர்ந்து வரும் வெனிசுலா நாட்டில், ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பொலிவர் பியூர்ட் (வெனிசுலா நாணயம் – Bolivar Fuerte) 61,74,900 ஆக உள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ, கடந்த 2017 ம் ஆண்டில் 1,00,000 பொலிவர் மதிப்பிலான நாணயத்தை (1 Lakh bolivar note) அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாகவும் அதன் மதிப்பு சரிந்தது. கடந்த ஜூன் மாத முடிவில் 1 லட்சம் மதிப்பிலான பொலிவர் நோட்டு, ஒரு டாலருக்கு சமமாக இருந்தது. தற்போது அதன் மதிப்பு  0.016 (1 Cent) டாலராக உள்ளது கவனிக்கத்தக்கது. இதே போல ஜிம்பாப்வே நாட்டிலும் பணமதிப்பிழக்க நடவடிக்கையாக 100 டிரில்லியன் டாலர் (100 லட்சம் கோடி) மதிப்பிலான நோட்டு வெளியிடப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.